
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவில், ஆட்சியிலுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியின்றி உள்ளது. ஊழலில் திளைத்துள்ள ஆளுங்கட்சியினர் இடையே கருத்து வேற்றுமைகள் மிகுந்துள்ளன. முதல்வர் உம்மன் சாண்டிக்கும், காங்., தலைவர் வி.எம்.சுதீரனுக்கும் இருந்த ஒற்றுமையின்மை தான், கேரளாவில், 'பார்'கள் மூட காரணமாக அமைந்தது. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் தவிர, அனைத்து, 'பார்'களும் மூடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகையில், பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்கள் மற்றும் படகு சவாரி போன்ற சுற்றுலா சம்பந்தப்பட்ட அனைத்திலும், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், வெளிவந்த சுற்றுலா பயணிகள் பட்டியலில், ஆந்திரா மற்றும் தமிழகம் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள நிலையில், கேரளா, 10வதாக பின்தங்கியுள்ளது.
— ஜோல்னாபையன்.