PUBLISHED ON : ஏப் 18, 2021

அ நிறம் | அளவு
மியான்மரில் உள்ளது, பாகான் நகரம். இதை கோவில் நகரம் என்றே அழைக்கின்றனர். இங்கு, 2,000திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களை ஒரேயடியாக பார்க்க முடியாது. ஆனால், வானத்தில் இருந்து பார்த்தால், அனைத்தும் தெரியும்.
பல்லாண்டுகளுக்கு முன், இங்கிருந்த வெள்ளையர் ஒருவருக்கு, ஒரு யோசனை உதித்தது. ராட்சத பலுான்களை பயன்படுத்தினால் அனைத்து கோவில்களையும் காண முடியும் என்று யோசித்தார். அப்படித்தான் இங்கு பலுான் பயணம் ஆரம்பித்தது.
பலுானில் ஏறி ஊர் சுற்றுவதற்கு, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது, அரசு. பலுான் பயணம் மூலம், பாகான் நகருக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.
ஜோல்னாபையன்
