/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நோஞ்சான்களை பலசாலிகளாக்கும் பனியன்!
/
நோஞ்சான்களை பலசாலிகளாக்கும் பனியன்!
PUBLISHED ON : நவ 10, 2013

பெண்களின் அழகை, அதிகரித்து காட்டும் வகையில், ஏராளமான உடைகள், தயாரிக்கப் படுகின்றன. இப்போது, முதல் முறையாக, ஆண்களின் உடல் கட்டை அதிகரித்து காட்டும் வகையிலான உடைகள்தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த, அஜ் புனு என்பவர், தயாரித்துள்ள இந்த உடை, ஆண்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் உள்ளாடை. இதை அணிந்து, வெளியில் வந்தால், நோஞ்சான் ஆண்கள் கூட, பரந்த மார்பு, விரிந்த தோள், தட்டையான வயிறு, புடைத்த புஜம் என, ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போல், தோற்றமளிக்கின்றனர். இந்த பனியனின் விலை, 6,000 ரூபாய். முதல் கட்டமாக, மிக குறைந்த எண்ணிக்கையிலேயே, தயாரிக்கப்பட்டதால், அனைத்துமே விற்பனையாகி விட்டது. இப்போது, அதிக எண்ணிக்கையில், பனியன்களை தயாரித்து வருகின்றனர்.
- ஜோல்னா பையன்.

