தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அழகு குறிப்பு!

அழகு குறிப்பு!

அழகு குறிப்பு!


PUBLISHED ON : நவ 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கறிவேப்பிலை இலைகளை நிழலில் உலர்த்தி, மிஷினில் நைசாக அரைக்கவும். அதை தண்ணீர் விட்டு குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரில் குளித்து வந்தால், தலைமுடி கறுப்பாகும்; முடியும் நீண்டு வளரும்.

*  செம்பருத்தி இலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து, தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்தால், கோடையில் உடல் சூடு தணியும்.

* எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு சேர்த்து, 'டூத் பிரஷ்'ஷால் பல் தேய்த்து வந்தால், மஞ்சள் நிறம் நீங்கி, நாளடைவில் வெண்மையாகும்.

* முகம் சொர சொரப்பாக இருக்கும் பெண்கள், திராட்சை பழச்சாறு ஒரு கரண்டி, பன்னீர் ஒரு கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், பளபளப்பாகவும், வழுவழுப்பாகவும் மாறும்.

* ஆலிவ் எண்ணெயை கொதிக்க வைத்து, ஆறியபின், சேலை கட்டி கறுப்பான இடுப்பு பகுதியில் தேய்த்து வர, அது மறைந்து விடும்.

* நாட்டு மருந்து கடைகளில் கோரைக் கிழங்கு கிடைக்கும். இந்த கிழங்கை வாங்கி அம்மியில் அரைத்து உடலில் பூசி குளித்தால், தேவையில்லாது வளரும் உரோமம் உதிரும். கை, கால்கள் மழ மழவென்று பளபளப்பாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us