தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பீர் திருவிழா ! - ஜெனித் மார்க்

பீர் திருவிழா ! - ஜெனித் மார்க்

பீர் திருவிழா ! - ஜெனித் மார்க்


PUBLISHED ON : அக் 03, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 200 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பீர் திருவிழா பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?

உலகில் உள்ள எல்லா வகை பீர்களையும் ருசிக்க விரும்புபவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். இந்த விழா, ஜெர்மனி நாட்டில் முனீச் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.

'அக்டோபர் விழா' என்ற பெயரில் நடக்கும் இந்த விழா, உண்மையில் செப்டம்பர் மாதம் துவங்கி விடும். 17 நாட்கள் நகரம் முழுவதும் பீர் திருவிழா நடக்கும். விழாவின்போது எல்லா வகை பீர் பானங்களும் தாராளமாக வினியோகம் செய்யப்படும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு பீரை ருசிப்பர். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசர் லுத்விக் என்பவருக்கு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டு அவரது திருமண நாளை கொண்டாட இந்த விழா நடந்தது. பெரிய பீர் பீப்பாயில் பீர் நுரைத்து தள்ளும் காட்சி அப்போது இடம் பெற்றது. குதிரைப் பந்தயமும் நடத்தது. பின்னர் விவசாய கண்காட்சியும் இந்த விழாவில் சேர்ந்தது. கடந்த 1960 முதல் குதிரைப் பந்தயம் ரத்தானது. இந்த ஆண்டு, 200வது ஆண்டு விழா கொண்டாடப்படுவதால் மீண்டும் குதிரைப் பந்தயம் நடந்தது. இதற்கிடையில் காலரா நோய் பரவியதாலும், உலகப் போர்களின் போதும் சில ஆண்டுகள் இந்த விழா நடக்கவில்லை. இவ்வாறு 24 ஆண்டுகள் இந்த விழா நடக்கவில்லை. மற்ற எல்லா ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்றது. உலகில் பல ஆண்டுகள் தொடர்ந்து, நீண்ட நாட்கள் நடக்கும் விழா இது என்ற சாதனையும் படைத்துள்ளது. முதலில் ஜெர்மானியர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், பின்னர் ஐரோப்பாவைச் சேர்ந்த பல நாட்டு மக்கள் கலந்து கொண்டனர். இப்போது இந்த விழா சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளதால், பல நாட்டு மக்களும் வித, விதமான பீரை ருசிக்க ஜெர்மனியில் குவிகின்றனர். உங்களுக்கும் பீர் ருசிக்க ஆசை இருந்தால், ஒரு நடை ஜெர்மனி போய் வாருங்கள்.                ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us