PUBLISHED ON : செப் 06, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசியல் வாதிகள், சுவரொட்டிகளால் சுவர்களை அசிங்கப்படுத்திக் கொண்டே தான் இருப்பர். ஆனால், பூடானில் தேர்தல் சமயங்களில் சுவரொட்டி ஒட்டுவதற்கென்று அரசே தனி இடம் ஒதுக்கி தருகிறது. அந்த இடங்களில் மட்டுமே வேட்பாளர், தன் படத்துடன் சிறிய சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்.
நம் நாட்டிலும், அரசு இதை செயல்படுத்தினால், சுவர்கள் அலங்கோலமாவது தவிர்க்கப்படும்.
— ஜோல்னாபையன்.

