
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இத்தாலி தலைநகரம் ரோம் நகருக்கு வரும் சுற்றுலா பயணியர், 'த்ரே வி பவுண்டன்' என்ற செயற்கை நீரூற்றை கண்டால், அதன் முன் நின்று புகைப்படம் எடுக்காமல் போக மாட்டார்கள்.
க்ளமண்ட், 12வது போப் மனதில் உதித்தது தான், இந்த நீர் ஊற்று ஐடியா. அன்று யோசனை உதித்தாலும், 30 ஆண்டுகளுக்கு பிறகே, கட்டுமான பணி துவங்கியது. பிறகு, 1762ல், க்ளமண்ட் 13வது போப், இதை மக்களுக்காக அர்ப்பணித்தார்.
இங்குள்ள அழகிய சிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீருக்கு அற்புத சக்தி இருப்பதாக நம்புகின்றனர், சிலர். அந்த காலத்தில், யுத்தத்துக்கு செல்லும் வீரர்கள், மனைவியுடன் இங்கு வருவர். அப்போது, மனைவி இங்கிருந்து தண்ணீர் எடுத்து, கணவர் வாயில் ஊற்றி விடுவார். இப்படி செய்வதால், கணவர் உயிர் காப்பாற்றப்படும் என்று நம்பினர்.
— ஜோல்னாபையன்