sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பீஷ்மரின் உறுதி

/

பீஷ்மரின் உறுதி

பீஷ்மரின் உறுதி

பீஷ்மரின் உறுதி


PUBLISHED ON : பிப் 02, 2014

Google News

PUBLISHED ON : பிப் 02, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னோர்களின் அனுபவ வார்த்தைகளே, சாஸ்திரங்கள். அந்த சாஸ்திரபடி, வாழ்க்கையை நடத்துவோருக்கு, ஒரு குறைவும் உண்டாகாது. சாஸ்திரங்களின்படி வாழ்க்கை நடத்திய, பீஷ்மரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது...

சிராத்தம் என்பதே சரி. சிரார்த்தம் என்பது தவறு. சிரத்தையுடன் செய்ய வேண்டியது என்பதினாலேயே இது, சிராத்தம் எனப்பட்டது. மற்ற கர்மாக்களை செய்யும் போது இருப்பதை விட, சிராத்தம் செய்யும் போது, மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

ஒரு சமயம், பீஷ்மர், பித்ரு சிராத்தம் செய்யத் துவங்கினார். அதனால் பீஷ்மர்

மிகுந்த சிரத்தையுடன், சிராத்தம் செய்து கொண்டிருந்த போது, பீஷ்மருடைய தகப்பனாரான சந்தனுவிற்கு, ஒரு எண்ணம் தோன்றியது. 'நம் மகன், நமக்காக சிராத்தம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய சாஸ்திர நம்பிக்கையை, நாம் சோதனை செய்து பார்க்கலாம்...' என, நினைத்து, பிண்டப் பிரதானம் நேரத்தில் கொடுக்கும் பூமியை பிளந்து, கையை நீட்டி, 'மகனே பீஷ்மா... பிண்டத்தை என் கையில் கொடு...' எனக் கேட்டார் சந்தனு.

பீஷ்மரோ, 'தந்தையே... பிண்டத்தை, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைக்கச் சொல்லித் தான், சாஸ்திரங்கள் கூறுகின்றன. தந்தையின் கையில் கொடுக்கும்படி, அவை சொல்ல வில்லை...' என்று சொல்லி, தந்தையின் கைகளை விலக்கி, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைத்தார். சந்தனு மகிழ்ந்து; பீஷ்மருக்கு ஆசி கூறி, அகன்றார். எனவே, சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை சிரத்தையுடன் கடைபிடித்து நடந்தாலே வாழ்வில் ஏற்படும் பாதி துன்பங்கள் மறையும்!

பி.என்.பரசுராமன்

விதுர நீதி!

தனியாக ஒருவன், சுவை மிகுந்த விருந்துணவை உண்ணக் கூடாது; முக்கியமான விஷயங்களை பற்றி முடிவெடுக்க கூடாது; தனியாக பயணம் செய்யக் கூடாது; மற்றவர்கள் உறங்குகையில், விழித்திருக்க கூடாது.

— என்.ஸ்ரீதரன்.






      Dinamalar
      Follow us