PUBLISHED ON : ஏப் 20, 2014

அ நிறம் | அளவு
ஒரு பெரியவர் தந்தாரென்று, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டேன். இரண்டு, மூன்று நாள் ஆயிற்று. 'உங்களுக்கு ருத்ராட்சம் ஒரு தெய்வீகக் களையைத் தருகிறது...' என்று, வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் கூறினார். வந்தவர் சொன்ன புகழுரை, இரவெல்லாம், காதருகில் வட்டமிட்டுக் கொண்டே இருந்தது. அதில், ஒரு இனிப்பு இருப்பதை உணர்ந்தேன். அப்போது, நள்ளிரவு, 1:00 மணி இருக்கும். எழுந்தேன்; கழற்றினேன். சுவாமி அலமாரியில், ஒரு ஆணியில் மாட்டி விட்டேன். அப்புறம் தான், தூங்க முடிந்தது. களை, கலைக்கக் கூடாது நிம்மதியை.
— பாக்கியம் ராமசாமி.
