PUBLISHED ON : ஆக 03, 2014

நம்மால் முடியுமா என்று, நம் வலிமை குறித்து, நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருத்தர் தினமும் கீதையில், ௧௮ அத்தியாயம் படித்த பின் தான், காபி சாப்பிடுவார். இதைக் கேள்விப்பட்டவுடன், நம்மால் அப்படி செய்ய முடியுமா என்று தோன்றுகிறதா... ஒரு நாள் செய்து தான், பார்த்து விடுங்களேன்.
இப்படித்தான், ஒருவர், தினமும், ௩௬ தடவை, கந்த சஷ்டிக் கவசம் படிப்பது வழக்கம். இதைக் கேள்விப்பட்ட நான், 'நம்மால் முடியாதா என்ன?' என்று, ௩௬ தடவை வாசித்தேன். பின், அகங்காரமாக இன்னொரு எண்ணம் தோன்றியது. 'அந்த ஆசாமி, ஒரு நாள் தானே படித்தார். நான் தொடர்ந்து, ௩௬ நாள், தினமும், ௩௬ தடவை வீதம் படித்துக் காட்டுகிறேன்...' என்று, சவால் விட்டுப் படித்தேன். விளைவு, ஒரே நிலையில் காலை மடித்து (சப்ளாங்கால்) போட்டுப் படித்ததால், காலில் பெரிய உஷ்ணக் கட்டி ஏற்பட்டு, குணமாக ஒரு மாதம் ஆயிற்று. ஆனாலும், ஒரு திருப்தி... நம்மாலும் முடியும் என்று!
— பாக்கியம் ராமசாமி.
