தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாக்ஸ் மேட்டர் !

பாக்ஸ் மேட்டர் !

பாக்ஸ் மேட்டர் !


PUBLISHED ON : அக் 03, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடி, குடியைக் கெடுக்கும்; ஆனால், அரசைக் காப்பாற்றும்!

'நிறைய குடிங்க... அதிகமாக புகை பிடியுங்க...' இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஷ்ய நிதி அமைச்சர் அலெக்சி குட்ரின். 'மிக அதிகமாக குடித்து, அதிகமாக புகை பிடித்தால் மதுபான விற்பனை, சிகரெட் விற்பனை அதிகமாகும். அதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகமாகும். அந்த வருமானத்தின் மூலம் சமூக சேவை பணிகளில் அரசு வேகமாக ஈடுபடும்...'  என்கிறார் குட்ரின். ரஷ்யாவில் மது, சிகரெட் விற்பனை ஏற்கனவே மிக அதிகமாக உள்ளது. இந்த நாட்டில் 65 சதவீத ஆண்கள் புகை பிடிக்கின்றனர். ஒவ்வொரு ரஷ்யரும் சராசரியாக ஆண்டுக்கு 18 லிட்டர் மதுபானம் குடிக்கிறார். மற்ற நாடுகளை விட ரஷ்யாவில் தான் சிகரெட், மதுபான விலைகள் குறைவு. இவற்றிற்கு அரசால் விதிக்கப்படும் வரியும் குறைவு. நிதி நெருக்கடியை சமாளிக்க வரியை அதிகப்படுத்தி, வருவாயை பெருக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காகத்தான் இப்படி ஒரு நூதனமான அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.                                                           

— ஜோல்னா பையன்.

தம்பதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு!

திருமணம் முடிந்த உடனேயே குழந்தைகளை பெற்றுக் கொள்ளாமல், இரண்டு வருடம் காத்திருந்தால் தம்பதியருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கும். இப்படி ஒரு புரட்சிகரமான திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் புதுப்புது திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. மகாராஷ்டிர மாநில அரசில் சமூக நலத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த துறையை சேர்ந்த பெண்கள், கிராமங்களுக்கு சென்று, புதுமண தம்பதியர்களை சந்திப்பர். 'இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், 5  ஆயிரம் ரூபாயை அரசு பரிசாக தரும்!' என அறிவிப்பர். அதற்கு உடன்படும் தம்பதியினரிடம் குடும்பக் கட்டுப்பாடு முறைகளை எடுத்துச் சொல்வர். இந்த திட்டத்திற்கு, மகாராஷ்டிராவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தலாமா என யோசித்து வருகிறது மத்திய அரசு.                    —  ஜோல்னா பையன்.

பெண் குழந்தை வேண்டுமா? வாழைப்பழம் வேண்டாம்!

பெண் குழந்தை வேண்டுமா? அப்படியானால்  வாழைப்பழம் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். பீன்ஸ், சீஸ் மட்டுமே சாப்பிட்டால் பெண் குழந்தை பிறக்கும். ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மூலம் இதை  கண்டுபிடித்துள்ளனர். கால்சியம், மக்னீசிய சத்துக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால், பெண் குழந்தை பிறக்கும். சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டால், ஆண் குழந்தை பிறக்கும். அதே நேரத்தில், தந்தையின் உணவு பழக்கக்துக்கும், இதற்கும் தொடர்பு கிடையாது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. —  ஜோல்னா பையன்.

2012 ஜனவரி முதல் தொலைபேசிக்கு பத்து இலக்க எண்கள்!

நாடு முழுவதும் உள்ள தரை வழி தொலைபேசி இணைப்புக்களில் தற்போதுள்ள எட்டு இலக்க எண்களை, பத்து இலக்க எண்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம், ஜன., 1, 2012 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன்படி வரும் டிச., 31, 2011க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. ஜன., 1, 2012ம் முதல் நாடு முழுவதும் அனைத்து தரை வழி தொலைபேசி எண்களையும் பத்து இலக்க எண்களாக அமல் படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி ஆகியவற்றின் எண்ணிக்கை 75 கோடியை எட்டி விட்டது. 45 கோடி மொபைல் போன் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்புக்களின் எண்ணிக்கை வரும் 2014ம் ஆண்டுக்குள் 100 கோடியை எட்டி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  — ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us