தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்


PUBLISHED ON : நவ 28, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பைக்கின் மதிப்பு 4.5 கோடி ரூபாய்!

படத்தில் காணப்படும் இந்த பைக்கின் மதிப்பு என்ன தெரியுமா? கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். இதன் மதிப்பு, 4.5 கோடி ரூபாய். உலகில், இந்த மதிப்பில் உள்ள ஒரே மற்றும் முதல் பைக் இதுதான். இந்த பைக் இருப்பது அமெரிக்காவில். உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பைக்கில், அப்படி என்ன விசேஷம் தெரியுமா? பிரபல ஓவிய கலைஞர் ஜேக் ஆம்ஸ்ட்ராங் என்பவர் இந்த பைக்கில் தீட்டியுள்ள ஓவியம் தான். விசேஷ பெயின்டால், அவர், இந்த பைக்கை அலங்கரித்த பின்னர் தான், இதன் மதிப்பு, 4.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மரினா டெல் ரே ÷ஷாரூமில், இந்த பைக் காட்சிக்கு வைக்கப் பட்டது.                                   

  — ஜோல்னா பையன்.

ஆறரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன கார் நம்பர்!

கார், பைக்குகளுக்கு பேன்சி நம்பர்களை பயன்படுத்துவது என்றால், ஆந்திரகாரர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை பயன்படுத்தி, பேன்சி நம்பர்களை ஏலம் விட்டு, இரண்டு கோடி ரூபாயை சம்பாதித்து விட்டது ஆந்திர அரசின் போக்குவரத்து துறை.'9999' என்ற நம்பருக்குத்தான் ஆந்திராவில் கிராக்கி அதிகம். சமீபத்தில், இந்த நம்பர் ஏலம் விடப்பட்டது. ஆறரை லட்சம் ரூபாய் கொடுத்து, இந்த நம்பரை ஒருவர் ஏலம் எடுத்தார். மற்ற பேன்சி நம்பர்களைப் பெற வேண்டும் என்றால், 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி ரூபாய்களை நம்பர் ஏலம் மூலம் மட்டுமே சம்பாதித்து வருகிறது ஆந்திர அரசு.

— ஜோல்னா பையன்.

45 கோடி மதிப்பில் வீடு!

உலகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள, இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரில் கட்டியுள்ள வீடுதான் இது. இந்த வீட்டின் கட்டுமான மதிப்பு மட்டும் 45 கோடி ரூபாய். மும்பை நகரில் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் மலபார் ஹில் மையப் பகுதியான அன்டிலா என்ற இடத்தில், இந்த பிரமாண்ட வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு, நூறு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். மொத்தம் 27 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் அடித்தளத்தில் 160 கார்களை நிறுத்த வசதி உள்ளது. இந்த வீட்டை பராமரிக்க மட்டும் 600 ஊழியர்கள் தேவை. இந்த வீட்டில் தனி ஹெல்த் கிளப், 50 பேர் அமர்ந்து சினிமா பார்க்கும் அரங்கம், டான்ஸ் ஸ்டூடியோ என சகல வசதிகளும் உள்ளன. வீட்டின் கூரையில் ஹெலிகாப்டர் தளமும் உண்டு. இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, தன் மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசிக்க இருக்கிறார்.

உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள  போர்ப்ஸ் நிறுவன அறிக்கையின் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய். 2014ம் ஆண்டில் இவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரராகி விடுவார் என இந்த நிறுவனம் கணித்துள்ளது.    — ஜோல்னா பையன்.

பீச்சில் குடை நட தடை!

ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் உள்ள கடற்கரைக்கு சுற்றுலா வரும் பயணிகள், பீச்சை சேதப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமானது பெர்த் பீச். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், கடற்கரை முழுவதும் துவாரம் போட்டு, பெரிய குடைகளை நட்டு, அதன் கீழ் படுத்து இருப்பர். இவ்வாறு செய்வதால், பீச் அழகு கெட்டுப் போகிறது; கடற்கரை மணல் பரப்பும் வீணாகிறது. நிறைய பொம்மைகளை குழந்தைகள் எடுத்து வருகின்றனர். அதனாலும், கடற்கரை பாழாகிறது. எனவே, 'இனி பீச்சில் யாராவது குடை நட துவாரம் போட்டாலோ, விளையாட்டு பொருட்களை கொண்டு வந்தாலோ அவர்களுக்கு 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்!' என பெர்த் உள்ளாட்சி அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கான புது சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்டப்படி, பீச்சிற்கு வரும் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் முறையாக டிரஸ் அணிந்து இருக்க வேண்டும், நிர்வாணமாக யாரும் இருக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, நடைபாதைகளில் உட்கார கூடாது. இந்த சட்டத்திற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 — ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us