தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்


PUBLISHED ON : ஜன 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில் நிலையத்தில் பெண் பேய்!

இந்தியாவில், ஒரு ரயில் நிலையம், ஊழியர்கள் யாருமே இல்லாமல், 42 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. காரணம், இந்த ரயில் நிலையத்தில், வெள்ளை சேலையுடன் பெண் பேய் ஒன்று உலவுவதாக நிலவும் வதந்தி தான். மேற்கு வங்கத்தில் பெகன் கோடர் என்ற சிறிய ரயில் நிலையம் உள்ளது. தென் கிழக்கு ரயில்வேக்கு சொந்தமான இந்த ரயில் நிலையத்தில், 1967ல் ஒரு விபத்து நடந்தது. வேகமாக சென்ற ரயில் மோதி, ஒரு பெண் இறந்தார். அந்த பெண் இறந்த சில நாட்களில், இரவில் அவள், வெள்ளை சேலையுடன் ஆவியாக ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாக, அதன் ஊழியர்கள் கூறினர். அந்த பேய் பயத்தால் ரயில்வே ஊழியர் ஒருவர் மரணமடைந்தார். இது, பெரும் பீதியை ஏற்படுத்தியது. அந்த ரயில் நிலையத்தில் பணியாற்ற எந்த ஊழியரும் முன்வருவது கிடையாது. எனவே, 1967ம் ஆண்டு முதல் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. எப்போதாவது நிற்கும் ஒரு சில பாசஞ்சர் ரயில்கள் கூட, இந்த ரயில் நிலையத்தில் நிற்காது. இப்போது, இந்த ரயில் நிலையத்தில் கமிஷன் அடிப்படையில் டிக்கட் விற்க தலு மகாதோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் 25 பைசா கமிஷன் கிடைக்கும். இவரும் மாலை ஆறு மணிக்குள் இந்த ரயில் நிலையத்தை விட்டுச்சென்று விடுவார். அதன் பின், இந்த ரயில் நிலையம் ஆள் அரவமின்றி காணப்படும். ***

மடியில் லேப்டாப்பா? ஆண்மைக்கு ஆபத்து!

மடிக்கணினி என அழைக்கப்படும், 'லேப்டாப்' கம்ப்யூட்டர் களை, மடியில் வைத்து பயன்படுத்தினால், ஆண்மை குறையும் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் ஸ்டேட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிறுநீரக இயல் துறை தலைவர் யீ பிம்ஷெயின்கின் என்பவர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. லேப்டாப்களை மேஜைக்கு பதில் மடியில் வைத்து பயன்படுத்தும் ஆண் களிடம் இந்த சோதனை நடந்தது. மடியில் லேப்டாப்பை பத்து நிமிடங்கள் வைத்திருந் தாலே மடியில் அதிகமாக சூடு பரவும். இதன் மூலம், ஆண்களின் விந்தணுக்கள் பாதிக்கப்படும். மடியில் லேப்டாப் வைத்து பணியாற்றுபவர்களிடம், ஒரு மணி நேரம் கழித்து சோதனை செய்து பார்த்த போது, அவர்கள் மடிப்பகுதியில் நான்கு டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது. 1.8 டிகிரி வெப்பம் இருந்தாலே விந்தணு சேதமாகி விடும். எனவே, ஆண்கள் இனி லேப்டாப்பை மேஜை மேல் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என, இந்த குழு தெரிவித்துள்ளது. - ஜோல்னா பையன்.

பெரிய தலையுடன் தாய்லாந்து குழந்தை!

தாய்லாந்து நாட்டில் இந்த அபூர்வ குழந்தை உள்ளது. தலைநகர் பாங்காக் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்துள்ள இந்த குழந்தையின் தலை மட்டும் மிகவும் பெரிதாக, பார்க்கவே பயங்கரமாக உள்ளது. பல லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு வரும் அபூர்வ நோய் காரணமாக, இந்த குழந்தையின் தலை மட்டும் பெரிதாகி வருகிறது. 'எந்த சிகிச்சை மூலமும் இந்த குழந்தையின் தலை வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது...' என, டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். 'இந்த குழந்தை இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழும்...' என்றும் டாக்டர்கள்

கூறியுள்ளனர். - ஜோல்னா பையன்.

பெண்களுக்கு ஆபத்து ஹை - ஹீல்ஸ் செருப்பு!

ஹை-ஹீல்ஸ் செருப்பு அணியும் பெண்களா? இந்த செருப்பால் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் என பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஹை-ஹீல்ஸ் செருப்பு அணிந்து, அதனால் இடறி விழுந்து, ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பெண்கள் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என இந்த ஆய்வு கூறுகிறது. இதில், பெரும்பாலான பெண்களுக்கு காலில் சதை பிய்த்துக் கொள்கிறது; பலருக்கு பற்கள் உடைந்து விடுகிறது; சிலருக்கு உடல் முழுவதும் அடி படுகிறது. ஹை-ஹீல்ஸ் செருப்பு களால் இவ்வளவு பிரச்னை உள்ள போதிலும், பெரும் பாலான பெண்கள், இந்த வகை செருப்புகளையே விரும்பு கின்றனர். 'ஸ்டைலாக நடப் பதற்கு இந்த வகை செருப்புதான் உதவுகிறது. உயரத்தை அதிகமாக காட்டு கிறது. இவற்றால், காலில் வலி வருவது உண்மை தான். எனினும், இதைத்தான் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டி யுள்ளது...' என, இந்த ஆய்வின் போது தெரிவித்தனர் பெண்கள். — ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us