தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தக்காளி பழ மைதானத்தில் குத்துச் சண்டை!

தக்காளி பழ மைதானத்தில் குத்துச் சண்டை!

தக்காளி பழ மைதானத்தில் குத்துச் சண்டை!


PUBLISHED ON : ஏப் 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தக்காளி பழம் நிரப்பப்பட்ட மைதானத்தில் நடக்கும், குத்துச்சண்டை போட்டி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு அதிசய குத்துச் சண்டை போட்டி, சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.

சீனாவில் தென் மேற்கு பகுதியில் உள்ளது குவாங்சி சுவாங் மாகாணம். இங்கு, டியான்யாங் என்ற ஊரில், சமீபத்தில், இந்த சண்டை காட்சி நடந்தது. இதற்காக, ஊரின் மையப் பகுதியில், 8 கி.மீ., சுற்றளவு கொண்ட மைதானம் தயார் செய்யப்பட்டது. அதில், ஒரு அடி உயரத்திற்கு தக்காளி பழங்கள் கொட்டப்பட்டன. அவை எல்லாமே நல்ல சிவப்பு தக்காளி பழங்கள். பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் அங்கு குவிந்தனர்; அவர்களுக்குள் போட்டி துவங்கியது.

மைதானத்துக்குள் நுழைந்த அவர்கள், ஒருவரை ஒருவர் ஆவேசமாக தாக்கி சண்டை போட்டனர். அவர்கள் மோதல் உச்சக் கட்டத்தை அடையும் போது, தக்காளி பழங்கள் எல்லாமே நசுங்கி, சாறாக மாறின. தக்காளி சாற்றில் ஒருவர் மீது ஒருவர் உருண்டு புரண்டனர். கூடியிருந்த மக்கள் அனைவரும், கை தட்டி அவர்களை உற்சாகப் படுத்தினர்.

பல சுற்று போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு அணி வீரர்களும் களத்தில் நுழையும் போது, ஏராளமான தக்காளி பழங்கள் மைதானத்துக்குள் கொட்டப்பட்டன. கூடி நின்று வேடிக்கை பார்த்த மக்கள் மீதெல்லாம், தக்காளி சாறு தெறித்தது. அதையெல்லாம், மக்கள் பொருட்படுத்தவே இல்லை. சீனாவில் பல பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்களின் உறவினர்கள், இந்த போட்டியை பார்த்து ரசித்தனர்.

இந்த போட்டி, இந்த ஊரில் நடப்பது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு ஆண்டும், தக்காளி பழ அறுவடை சீசனில், இந்த போட்டி நடப்பது வழக்கம். தக்காளி பழங்கள் அதிக மகசூல் தர வேண்டும் என்பதற்காகவும், மக்களிடம் நட்பை வளர்க்கவும் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

நம்ம ஊரில் பொங்கல் பண்டிகையின் போது, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடப்பது போல், இந்த ஊரில் தக்காளி குத்துச்சண்டை போட்டி நடக்கிறது.

***

- எல். யுகேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us