தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டயானா வசித்த அரண்மனையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

டயானா வசித்த அரண்மனையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

டயானா வசித்த அரண்மனையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம்!


PUBLISHED ON : நவ 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரிட்டன் இளவரசர் வில்லியம், லண்டனின் பக்கிங்காம் அரண்மனையில் உள்ள, 'நார்த் ஆப் வேல்ஸ்' என்ற பகுதியில் வசித்து வந்தார். கதேயுடன் திருமணம் ஆன பின்பும், அதே பகுதியில் தான் வசித்து வந்தார். இளவரசர் வில்லியமுக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்து வந்தது. திருமணம் ஆனதும், காலம் சென்ற, தன் தாயார் டயானா, வசித்து வந்த கென்சிங்டன் அரண்மனையில் வசிக்க வேண்டும் என்று! இதுவும், பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் தான் உள்ளது. இளவர சர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் பிறந்து, வளர்ந்ததும் இங்கு தான்.

டயானா மறைவுக்கு பின், இந்த கென்சிங்டன் அரண்மனையை, தன் சகோதரியும், இளவரசி யுமான மார்கரெட்டுக்கு கொடுத்து விட்டார், பிரிட்டன் ராணி எலிச பெத். கடந்த, 2002ல் மார்கரெட் இறந்து விட் டார். அதிலிருந்து, கென்சிங்டன் அரண்மனையில் யாரும் வசிக்கவில்லை.

தன் தாயார் வசித்த அரண்மனையில், புது மனைவி யுடன் வசிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை, பாட்டி எலிசபெத்திடம் தெரிவித்தார், வில்லியம். இதற்கு, அவரும் சம்மதித்து விடவே, அரண்மனையை புனரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கென்சிங்டன் அரண்மனையின் உட்பகுதி முழுவதும், மார்கரெட்டுக்கு மிகவும் பிடித்த இளம் சிவப்பு மற்றும் நீல நிற கலவை பூசப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, தற்போது இளவரசி கதேவுக்கு மிகவும் பிடித்த நிற கலவை பூசப்படவுள்ளது. ஆனாலும், இந்த அரண்மனைக்கு, 2013ம் ஆண்டில் தான், குடிபுக போகிறார், வில்லியம். இந்த புனரமைப்பு பணிக்காக செலவிடப் போகும் தொகை எவ்வளவு தெரியுமா? ஏழு கோடி ரூபாய்!

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us