PUBLISHED ON : மார் 20, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு காலத்தில், கேரளாவில் உள்ள நம்பூதிரி இன பெண்கள், கல்வி கற்கவோ, வீட்டை விட்டு வெளியே போவதற்கோ அனுமதியில்லை. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கல்வி கற்று, அனைத்து துறைகளிலும் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கோழிக்கோடு, தாமரசேரி பேருந்து பணிமனையில், அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிகிறார், தீபா நம்பூதிரி என்ற இளம் பெண். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய இவர், அரசு வேலை என்பதால், நடத்துனர் வேலையில் சேர்ந்தார்.
இது, பெண்களுக்கு உகந்த பணியல்ல என்ற போதும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியுடன் பணியாற்றும் இவர், 'இரவு பணி என்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது; ஆனால், இப்போது பழகிப் போச்சு...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.

