/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சக ஊழியரை முத்தமிடலாமா? ஜெர்மனியில் புதிய சர்ச்சை!
/
சக ஊழியரை முத்தமிடலாமா? ஜெர்மனியில் புதிய சர்ச்சை!
சக ஊழியரை முத்தமிடலாமா? ஜெர்மனியில் புதிய சர்ச்சை!
சக ஊழியரை முத்தமிடலாமா? ஜெர்மனியில் புதிய சர்ச்சை!
PUBLISHED ON : அக் 09, 2011

நம்மில் பெரும்பாலானோர், கிரிக்கெட் விளையாட்டை, 'டிவி'யில் பார்த்திருப்போம். ஒரு விக்கெட் விழுந்து விட்டால், எதிர் அணி வீரர்கள், தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில், சக வீரர்களின் கைகளுடன், தங்கள் கைகளை தட்டுவதையும், பார்த்திருப்போம். ஜெர்மனியிலும் இதுபோல் ஒரு நடைமுறை, நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பணிபுரியும் இடங்களில் , சக ஊழியர், பாராட்டும்படி ஏதாவது செய்தால், உடனடியாக அவருக்கு, வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அல்லது மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில், கன்னத்தில் முத்தமிடுவது வழக்கம்; இதில், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை.
ஆனால், இந்த நடைமுறைக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சமூக அமைப்பு ஒன்று, சமீபத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'அலுவலகங்களில் பணிபுரியும் போது முத்தமிடுவதை, ஊழியர்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதுபற்றி எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, அலுவலகங்களில் முத்தமிடும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்...' என, அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆனால், மற்றொரு தரப்பினரோ, 'இது ஜெர்மனியின் கலாசாரம்; இதற்கு எப்படி தடை விதிக்க முடியும்...' என, எதிர்ப்பு குரல் எழுப்புகின்றனர்.
'இது ஒன்றும் ஜெர்மனி கலாசாரம் அல்ல. அலுவலகங்களில் முத்தமிடும் நடைமுறை என்பது, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து, வந்த கலாசாரம்...' என, அதற்கு பதிலு<ம் உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் போல் நீண்டு வரும் இந்த விவகாரத்தில், ஜெர்மன் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தான், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
— ஜோல்னா பையன்.

