PUBLISHED ON : ஜூலை 20, 2014

அ நிறம் | அளவு
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல, 'டிவி' நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியனுக்கு, 33 வயதாகிறது. இவர் எப்போதுமே, பொது நிகழ்ச்சிகளுக்கு அரைகுறை உடைகளை அணிந்து வருவது வழக்கம். தற்போது, இவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இனியாவது திருந்துவார் என பார்த்தால், ஊஹூம். சமீபத்தில் நியூயார்க்கில், தன் குழந்தையுடன் ஷாப்பிங் வந்த கிம் கர்தாஷியனை பார்த்து, சாலையில் போவோர், வருவோரெல்லாம், வாய் பிளந்து நின்றனர். கறுப்பு நிற ஓவர் கோட் அணிந்திருந்த கிம், உள்ளாடை எதுவும் அணியாமல், அலட்சியமாக நடந்து வந்தார். இவரின் வித்தியாசமான கோலத்தை புகைப்படம் எடுக்க, ஏராளமானோர் குவிந்து விட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்க, போலீசார் திணறி விட்டனர்.
— ஜோல்னாபையன்.
