sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தண்டமாகப் போன தண்டகன்!

/

தண்டமாகப் போன தண்டகன்!

தண்டமாகப் போன தண்டகன்!

தண்டமாகப் போன தண்டகன்!


PUBLISHED ON : மே 03, 2015

Google News

PUBLISHED ON : மே 03, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்...' என்றார் லோகமான்ய பாலகங்காதர திலகர். ஆனால், தற்போது, 'தவறு செய்வது என் பிறப்புரிமை; அதைச் செய்தே தீருவேன்...' என்ற எண்ணமும், செயல்பாடுகளும் மக்களிடம் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய எண்ணங்களும், செயல்பாடுகளும் எத்தகைய அழிவைத் தரும் என்பதை விளக்கும் கதை இது:

விந்தியம் மற்றும் சைலம் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியை ஆண்டு வந்தான் தண்டகன் எனும் அரசன். அப்பகுதிக்கு, மதுமந்தம் என்று பெயர்.

தண்டகன் தர்ம வழியில் ஆட்சி நடத்தினாலும், அரச பதவியும், அது தந்த சுதந்திரமும், அவனை ஆட்டிப் படைத்தன.

ஒரு நாள் மாலையில், நகர்வலம் வந்தான் தண்டகன். அப்போது, தன் குருவான சுக்கிராச்சாரியாரின் ஆசிரம வாயிலில் நின்றிருந்த அழகான பெண், அவன் பார்வையில் பட்டாள்.

அவள் அருகில் சென்று, அவளைப் பற்றி விசாரித்தான் தண்டகன்.

'மன்னா... நான், உங்கள் குருவான சுக்கிராச்சாரியாரின் மகள்; என் பெயர் அரஜை. தந்தை வெளியில் சென்றுள்ளார். சற்று நேரம் தாமதித்தால் வந்து விடுவார்...' எனப் பதில் கூறினாள்.

அவள் வார்த்தைகளை காதில் வாங்காத தண்டகன், அவளை நெருங்கினான்.

விலகி நின்ற அரஜை, 'மன்னா... நீ செய்வது தவறு; உனக்கு என் மேல் விருப்பம் இருந்தால், என் தந்தையிடம் உன் விருப்பத்தை தெரிவித்து, அவர் அனுமதியுடன், என்னை திருமணம் செய்து கொள். அது தான் உனக்கு நல்லது...' என, அறிவுரை கூறினாள்.

தண்டகன் கேட்கக்கூடிய நிலையில் இல்லை. தான் அரசன், தன்னை யார் கேட்க முடியும் என நினைத்து, அவளிடம் முறைகேடாக நடந்து கொண்டான்.

சிறிது நேரத்தில், ஆசிரமம் திரும்பிய சுக்கிராச்சாரியார், தன் அருமை மகளுக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து, கோபமடைந்து, 'மன்னன் என்ற ஆணவத்தில், தர்ம விரோதமாக நடந்து கொண்ட தண்டகனின் நாடு, அவனுடைய படைகள் இன்னும் ஏழு நாட்களுக்குள் அழியட்டும்; தேவேந்திரன் மணல் மழை பொழியட்டும்...' என்று சாபம் கொடுத்தார்.

பின் மகளிடம், 'அரஜை... நீ, ஆசிரமத்திற்கு அருகில் உள்ள, இப்பெரிய ஏரிக் கரையில் வசித்து வா... மண் மழைக்குப் பயந்து இங்கு வருகிற மக்கள் நலம் பெறுவர். நீ, இங்கு பல காலம் தவம் செய்து, நலம் அடைவாய்...' என்று கூறி, அங்கிருந்து சென்றார் சுக்கிராச்சாரியார்.

அவர் சாபம் பலித்தது. தேவேந்திரன் மண் மாரி பொழிந்ததால், தண்டகனின் ராஜ்ஜியம் அழிந்தது. அதுவே (ராமாயண பிரபலமான) தண்டகாரண்யம் என, பெயர் பெற்றது.

படிப்பு, பதவி, ஞானம் மற்றும் செல்வம் என உயர் நிலையில் இருந்தாலும், பெண்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்பவன், அழிந்து போவான்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி

தேற்றுமின் என்னும் சிவனடிக்கே செல்வம்

மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை

மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே!

கருத்து: புனிதனாகிய சிவபெருமான் திருவடிகளை இசையால் பாடியும், துதித்தும் வழிபடுங்கள். செல்வமெல்லாம் சிவன் தந்தது என்ற தெளிவைப் பெற்று, அறம் செய்யுங்கள். மயக்கம் உற்ற மனதை மாற்றி, இறைவனையே பற்றாகக் கொண்டு, நல்வழியில் நடப்பவர்களுக்கு, அந்த இறைவனே துணையாக வந்து நிற்பான்.






      Dinamalar
      Follow us