தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பூனை தீவுகள்!

பூனை தீவுகள்!

பூனை தீவுகள்!


PUBLISHED ON : ஆக 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பசிபிக் கடலில், தெற்கு ஜப்பானை ஒட்டி, 12க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றை, பூனை தீவுகள் என அழைக்கின்றனர். காரணம், இங்கு, மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமாக, பூனைகளும் உள்ளன.

இத்தீவுகளுக்கு படகில் சென்றால், கரையிலேயே நம்மை வரவேற்கும், பூனைகள். தீவு முழுதும் பூனைகள் சகஜமாய் நடமாடுகின்றன.

முன்பு, இத்தீவுகளில் பட்டு உற்பத்தி செய்யப்பட்டது; பட்டு தயாரிப்புக்கு முக்கிய எதிரி எலி. எலிகளை அழிக்க, பூனைகள் வளர்க்கப்பட்டன.

தீவுகளில், பட்டு உற்பத்தி நின்று போனதால், அங்கு, வசித்த மக்களில் பலர், ஜப்பான் நகரங்களுக்கு சென்று விட்டனர். தற்சமயம், இங்கு மீனவர்கள் தான் வசிக்கின்றனர்.

நம் நாட்டில், பூனை குறுக்கே போனால், போகும் காரியத்திற்கு தடை என்பர். ஜப்பானிலோ, பூனையின் நடமாட்டத்திற்கு குறுக்கே, மனிதன் செல்ல நேர்ந்தால், அதிர்ஷ்டம் தேடி வரும்; பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதனால், பூனையை யாரும் தொந்தரவு செய்வதில்லை. அத்துடன், இங்குள்ள, 12 தீவுகளிலும், பூனைக்களுக்கென்று கோவில்கள் உள்ளன. பூனை வடிவமுள்ள கற்கள் ஆங்காங்கே நடப்பட்டுள்ளன.

பூனைகளால் இந்த தீவுகள் பிரபலமாகி விட்டன. பூனை அபிமானிகள் நிறைய பேர், இங்கு சுற்றுலா வருகின்றனர். பூனையை வைத்து திரைப்படம், ஒரு டெலி சீரிஸ் மற்றும் காமிக்சும் வெளி வந்துள்ளன.

ஜப்பான் நாட்டின் தலைநகரான, டோக்கியோ நகரிலிருந்து, 120 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளன, இந்த தீவுகள்!

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us