
சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால், உடனே, அவ்விடத்தை விட்டு நாம் வெளியேறி விட வேண்டும். இந்த பல்புகளுக்குள் இருக்கும் மெர்க்குரி திரவம், ஆர்சனிக் மற்றும் துத்தநாகத்தை விட, அதிக விஷத் தன்மை உடையது. இதை நுகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு மற்றும் அலர்ஜி ஏற்படும். மேலும், பல்பு உடைந்து விட்டால், 15 நிமிடத்திற்கு பின், கைகளில் படாமல், துடைப்பத்தால் சுத்தப்படுத்தவும். உடைந்த பல்பை சேகரித்து, குப்பைத் தொட்டியில் போடாமல், பாலிதீன் பையில் போட்டு, நன்கு மூடி, பிற உயிரினங்களுக்கு தொல்லை ஏற்படா வண்ணம், மண்ணில் குழி தோண்டி புதைக்க வேண்டும். வேக்குவம் கிளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது; ஏனெனில், அது உறிஞ்சும் போது, மெர்க்குரி துகள்கள், மற்ற அறைகளுக்கும் பரவும். சிறு குழந்தைகள் இருக்கும் இடத்தில், நன்கு சுத்தப்படுத்தவும்.

