sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

முதல்வனின் பிறந்த நாள்!

/

முதல்வனின் பிறந்த நாள்!

முதல்வனின் பிறந்த நாள்!

முதல்வனின் பிறந்த நாள்!


PUBLISHED ON : ஜன 26, 2020

Google News

PUBLISHED ON : ஜன 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரியனுக்குரிய முக்கிய திருவிழா, ரத சப்தமி. உலகத்திற்கே முதல்வனான சூரியனின் பிறந்த நாள் என்றும், மகா சப்தமி என்றும் கருதப்படுகிறது. ஒரு காலத்தில், அறுவடையின் ஆரம்ப நாளாக இந்நாள் இருந்தது. ஏழு குதிரைகள் பூட்டிய, 12 சக்கரங்களை கொண்ட தேரில், சூரியன் பவனி வருவதாக ஐதீகம். ஏழு குதிரைகள், ஏழு நாட்களையும், 12 சக்கரங்கள், 12 ராசிகளையும் குறிக்கிறது.

தமிழகத்தில், சூரியனார் கோவில், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி டவுன் - கரியமாணிக்கப் பெருமாள் கோவில்; ஆந்திராவில், திருப்பதி, மேல்கோட்டை, ஸ்ரீகாகுளம் ஆரசவல்லி; ஒடிசாவில், கோனார்க்; குஜராத்தில், மோதேரா; காஷ்மீரில், மாத்தாண்ட் கோவில்களில் ரத சப்தமி, மிக விசேஷம்.

இந்தியாவில் பல சூரிய கோவில்கள் கலைநயத்துடன் இருந்தாலும், தமிழகத்திலுள்ள, சூரியனார் கோவிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. காரணம், இங்கு மட்டுமே அனைத்து கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார், சூரியன். இங்கு, ஒன்பது கிரகங்களுக்கும் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களுக்கு என உள்ள தனி கோவில், இந்தியாவில் இது மட்டும் தான்.

சூரியனுக்குரிய வாகனம் குதிரை. இது, சூரியன் சன்னிதியின் எதிரே உள்ளது. சூரியனின் வெப்பத்தில் இது எரிந்து விடும் என்பதால், குதிரையை மறைத்து, குரு பகவான் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளது விசேஷம். குருவுக்கு மட்டுமே சூரியன் கட்டுப்படுவார்.

தமிழக கோவில்களில் மூலவருக்குரிய வாகனத்தை மறைத்து, சிலை ஏதும் இருக்காது. ஆனால், இங்கு இத்தகைய விசேஷ அமைப்பு இருக்கிறது.

மற்ற கோவில்களில், செல்வ விருத்தி, திருமணத்தடை நீக்கம் போன்றவற்றிற்காக, பக்தர்கள் வேண்டுதல் வைப்பர். இங்கு, வித்தியாசமான கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. மனிதனுக்கு உள் எதிரிகள், வெளி எதிரிகள் என, இரு வகையாக இருப்பர்.

வெளி எதிரிகளை அடையாளம் காண்பது எளிது. உள் எதிரிகளான ஆசை, கோபம், பொறாமை ஆகியவற்றை யாராக இருந்தாலும் அடக்க முடியாது. இந்த எதிரிகளை வெல்ல வேண்டும் என்ற கோரிக்கையே, சூரியனார் கோவிலில் பிரதானம்.

மற்ற கோவில்களில் தல விருட்சமாக, மரம் அல்லது செடி என, பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இங்கு எல்லாராலும் ஒதுக்கப்படும் எருக்கு, தல விருட்சமாக உள்ளது. எருக்கு இலைக்கு தொழுநோயைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இங்கு, பிப்., 1ல், ரத சப்தமி விழா நடக்கிறது.

கும்பகோணத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் சூரியனார் கோவில் உள்ளது.



தி. செல்லப்பா







      Dinamalar
      Follow us