PUBLISHED ON : அக் 19, 2014

அ நிறம் | அளவு
வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள் கணவனை ஆபீசுக்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிய பின், தங்கள் பொழுது போக்கிற்காக, 'டிவி'யே கதி என்று இருப்பர். இவர்களுக்காக, கேரளாவில் உள்ள மாகியை சேர்ந்த பிரியா, நடனப்பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். இங்கு, தற்போது ஏராளமான குடும்பத் தலைவிகள் நடனம் கற்று வருகின்றனர். இதுவரை ஆடாமல், அசையாமல் இருந்த பெண்கள், நடனத்தின் மூலம் தங்கள் உடலுக்கு வேலை கொடுத்து வருகின்றனர். வேலைக்கு போகும் பெண்கள் கூட, விடுமுறை நாட்களில் நடனம் கற்று வருவதாக கூறுகிறார் பிரியா.
— ஜோல்னாபையன்
