தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பருப்புகளுடன் மிளகாய் வற்றல் அல்லது வேப்பிலையை கலந்து வைத்தால், பூச்சி வராது

* தனியா விதைகளை சூடான வாணலியில் வறுத்து எடுத்து வைத்தால், வண்டு வராமல் பல மாதங்கள் நன்றாக இருக்கும்

*கொட்டை, நார் நீக்கிய புளியுடன் கல் உப்பை நன்றாக கலந்து புளி ஜாடியில் அடைத்து வைத்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்

*அரிசியை மொத்தமாக வாங்கி வைப்பவர்கள், அத்துடன் சில துண்டு வசம்பு அல்லது வேப்பிலையை கலந்து வைத்தால், பூச்சி, வண்டு வராது

* கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து வைத்தால், பூச்சிகள் வராது

*அலமாரி தட்டுகளில் பேப்பர் விரிக்கும் முன், அதனடியில் சில வேப்பிலைக் கொத்துகளை பரப்பினால் கரப்பான் பூச்சிகள், எறும்புகள் அண்டாது

*முட்டை ஓட்டின் மேல் லேசாக நல்லெண்ணெயை தடவி வைத்தால், 'பிரிஜ்'ஜில் வைக்காவிட்டாலும், 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us