sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சமையல் டிப்ஸ்!

/

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : அக் 02, 2022

Google News

PUBLISHED ON : அக் 02, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'கட்லெட்' செய்வதற்கு, ரொட்டி துாள் இல்லையென்றால், ரொட்டி துண்டுகளை தவாவில் புரட்டி எடுத்து, மிக்சியில் அரைத்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால், கட்லெட்டின் சுவையும் அதிகமாகும்

* பக்கோடா செய்ய, கடலை மாவுக்கு பதில் கடலைப் பருப்பும் பயன்படுத்தலாம். கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்சியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் சேர்த்து பக்கோடா செய்யலாம்

* பச்சரிசியை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, ஆப்பத்துக்கு அரைத்தால் சுவையாக இருக்கும்

* பிரெட் பக்கோடா செய்வதற்கு முன், வெட்டி வைத்திருக்கும் ரொட்டி துண்டுகளை பாலில் நனைத்து எடுத்து, பக்கோடா மாவில் கலந்து போட்டால் சுவையாக இருக்கும்

* மாவுடன், வறுத்த வேர்க்கடலை பொடியையும் சேர்த்து பிசைந்து, வெங்காய பக்கோடா செய்தால் ருசியாக இருக்கும்

* சர்க்கரை பொங்கல் செய்யும்போது, அரை கப் தேங்காய் பால் ஊற்றி கிளறி இறக்கினால், மிகவும் சுவையாக இருக்கும்

* இரண்டு டம்ளர் உளுத்தம் பருப்புடன், ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால், சுவையாக இருக்கும்.






      Dinamalar
      Follow us