
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பச்சை குடை மிளகாயின் காரத்தை போக்குவதற்கு, அதன் விதைகளை நீக்கிவிட்டு பிறகு சாம்பாரில் சேர்க்கலாம்.
* வெங்காய பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்தால் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
* முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களில் உள்ள இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு செய்தால், சுவையாக இருக்கும். சூப் செய்தும் சாப்பிடலாம்.
* ஒரு பாட்டிலில் பச்சை மிளகாயுடன், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு இறுக மூடி வைத்தால், நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்.
* வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது, அதனுடன் வேக வைத்த சோளத்தை சிறிது சேர்த்தால், பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.
— ஏ.எஸ்.கோவிந்தராஜன்