PUBLISHED ON : செப் 30, 2018

மற்றவர்களிடமிருந்து, தங்களை வித்தியாசமாக காட்டிக் கொள்வதற்காக, தற்போதைய இளைஞர்களும், இளம் பெண்களும், என்னென்னவோ செய்கின்றனர்.
இவர்களின் ஆசையை, 'பியூட்டி பார்லர்' உரிமையாளர்கள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, 'கல்லா' கட்டுகின்றனர்.
ரஷ்யாவிலுள்ள அழகு நிலையங்களில் நடப்பதைப் படித்தால், வேடிக்கையாக இருக்கும். நீண்ட நகங்களை வளர்க்கும் பெண்களுக்காகவே, ரஷ்யாவில், ஒரு, 'பியூட்டி பார்லர்' உள்ளது. இங்கு, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சிறிய குப்பியை நகத்துக்கு மேல் பொருத்துகின்றனர்.
முன்னதாக, அந்த குப்பிக்குள் ஒரு எறும்பை பிடித்து, உயிருடன் விட்டு விடுகின்றனர். அந்த எறும்பு, நகத்தை கடித்து விடாத வகையில், குப்பிக்கும், நகத்துக்கும் இடையே, சிறிய தடுப்பு உள்ளது. காற்று உள்ளே செல்வதற்காக, குப்பிக்குள் சிறிய துவாரமும் போடப்பட்டுள்ளது.
குப்பிக்குள் விடப்பட்ட எறும்பு, மேலும், கீழும் ஊர்ந்து செல்வதை பார்க்கும் போது, மற்றவர்கள் தான் பதறி போகின்றனர். சம்பந்தப்பட்டவர்களோ, பெருமிதப் படுகின்றனர்.
— ஜோல்னாபையன்.
