
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருணாசல் பிரதேச மாநிலத்தில் உள்ளது, கிப்து. இங்கு, ஏராளமான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில், முக்கியமானவரை, 'தலை வெட்டி' என்று அழைப்பர்.
மன்னர் காலத்தில், கோத்திர மக்களிடம் ஏற்படுகிற கருத்து வேறுபாட்டின்போது, கோத்திர தலைவர்களின் தலையை வெட்டி, மன்னர் முன் அர்ப்பணிக்கும் பணியை செய்பவர் தான், தலை வெட்டி. அந்த காலத்தில், இவர் அனைவராலும் கவுரவிக்கப்படுவார்.
எத்தனை தலைகளை வெட்டினார் என்பதற்காக, அவர் போட்டுள்ள மாலையில், உலோகத்தில் செய்யப்பட்ட மண்டையோடுகள் இருக்கும். இதன் எண்ணிக்கையை வைத்து, எத்தனை தலைகளை வெட்டி இருக்கிறார் என்பதை அறியலாம்.
படத்தில் காணப்படுபவர் தான், கடைசி தலை வெட்டி. இவர், வயது, 86. 1970ம் ஆண்டு வரை, இந்த பதவியில் இருந்தார்.
- ஜோல்னாபையன்

