sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி!

/

காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி!

காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி!

காளை மீது அமர்ந்த தட்சிணாமூர்த்தி!


PUBLISHED ON : டிச 15, 2019

Google News

PUBLISHED ON : டிச 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரிய ஊர்களை, நகரம் என்றும், சிறிய ஊர்களை, கிராமம் என்றும் அழைப்பர். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஊரின் பெயரே, கிராமம் என, உள்ளது. மலராய் இருந்து லிங்கமாய் மாறிய சிவன், இவ்வூரில் அருள்பாலிக்கிறார்.

கல் ஆல மரத்தின் கீழ், தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளது போல், சிலைகள் வடிக்கப்படும். இங்குள்ள, தட்சிணாமூர்த்தி, காளை மீது அமர்ந்துள்ளது சிறப்பு.

சொக்கலிங்கம் என்ற மன்னன், காட்டுக்கு வேட்டையாட சென்ற போது, அங்கிருந்த குளத்தில் அதிசய தாமரை மலரை கண்டான். தன் சேவகர்களை அனுப்பி, அதைப் பறித்து வர கட்டளையிட்டான். அவர்கள் மலரைத் தொட முயன்ற போது, அது குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது.

ஆச்சரியப்பட்ட மன்னன், அந்த மலர் மீது அம்பு விட்டான். குளம் முழுவதும் செந்நிறமாக மாறி, கரை ஒதுங்கியது, மலர். அதன் நடுவில் லிங்கம் இருந்ததைக் கண்ட மன்னன், அறியாமல் செய்த பிழைக்கு, சிவனிடம் மன்னிப்பு கேட்டான். குளக்கரையில் கோவில் கட்டி, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான்.

கோவில் கல்வெட்டில், இவ்வூர், மவுலி கிராமம் என குறிக்கப்பட்டுள்ளது. 'மவுலி' என்றால், சந்திரன்! சந்திரனை தலை முடியில் சூடியவர், சிவன். இதனால், இந்த சிவனுக்கு, 'முடீஸ்வரர்' என, பெயர் சூட்டப்பட்டது.

காலப்போக்கில், ஊரின் பெயரில் இருந்த, மவுலியை விட்டு, கிராமம் என, அழைத்தனர், மக்கள். சுவாமியின் பெயரும் சிவலோகநாதர் என, மாறியது.

சிவனின் வாயில் காவலர்களான திண்டி, முண்டி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம், 'முண்டீச்சரம்' எனப்பட்டது; தேவாரப்பாடல் பெற்றது.

தட்சிணாமூர்த்தி கல் ஆல மரத்தின் கீழ் அமராமல், ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.

வீரபாண்டியன் என்ற மன்னனுக்கு, திருநீற்றுப்பை அளித்துள்ளார், சிவன். எனவே, இங்கு தரும் திருநீறு, சக்தி மிக்கதாக கருதப்படுகிறது.

கோவில் நுழைவு வாயிலின் இடதுபுறம், விநாயகர் சன்னிதியும், வலதுபுறம், முருகன் சன்னிதியும் இருப்பது வழக்கம். இங்கு, இவர்கள் இடம் மாறி அருள்பாலிக்கின்றனர். அண்ணன், தம்பிக்குள் இடப்பிரச்னை கூடாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற தாத்பர்யப்படி, இவ்வாறு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவன் சன்னிதிக்கும், அம்மன் சவுந்தர்யநாயகி சன்னிதிக்கும் நடுவில், முருகன் சன்னிதி அமைந்துள்ளதால், இது சோமாஸ்கந்த தலமாக உள்ளது.

விழுப்புரம்- - திருவெண்ணைநல்லுார் சாலையில், அரசூர் வழியாக, 14 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us