தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தன்னந்தனியே உலகம் சுற்றிய இளம்பெண்!

தன்னந்தனியே உலகம் சுற்றிய இளம்பெண்!

தன்னந்தனியே உலகம் சுற்றிய இளம்பெண்!


PUBLISHED ON : பிப் 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெதர்லாந்தை சேர்ந்த லாரா டக்கர், 16 வயது இளம் பெண், படகு மூலமாக தன்னந்தனியே உலகைச் சுற்றி, சாதனை படைத்துள்ளார். கடந்த 2010, ஆகஸ்ட் மாதம் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் துவங்கிய இவரது சாதனைப் பயணம், இந்தாண்டு ஜனவரியில், கரீபியன் கடற்பகுதியில் உள்ள சின்ட் மாட்ரிட் என்ற இடத்தில் முடிவடைந்தது.

போர்ச்சுக்கல், பனாமா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் கடல் வழிகளை கடந்து, தன் சாகசப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். தன் பயணத்துக்காக, 'குப்பி' என பெயரிடப்பட்ட, 38 அடி நீளமுடைய மெகா படகை, பயன்படுத்தினார். சின்னஞ்சிறிய வயதில், லாரா டக்கர் படைத்த சாதனைக்கு பின், ஒரு வேதனையும் உள்ளது.

இந்த சாகசப் பயணத்தை துவக்கப் போவதாக லாரா டக்கர் அறிவித்ததும், 'லாராவின் செயல், குழந்தைகள் நலச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது' என, நெதர்லாந்து அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல தடைகளை கடந்து தான், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் லாரா. இதற்கான ஆசை அவருக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா? லாராவின் பெற்றோர், தங்களுக்கு திருமணம் முடிந்த ஒரு ஆண்டுக்கு பிறகு, நியூசிலாந்துக்கு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த கப்பல் பயணத்தில் பிறந்தவர் தான் லாரா. கடலில் பிறந்தவருக்கு, கடல் மீது காதல் வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us