
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேபாள தலைநகர் காட்மண்டு, சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என, அழைக்கப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து இழுப்பது, முகமூடி கடைகள் தான்.
இந்த கடைகளில் வித விதமான முகமூடிகள் விற்கப்படுகிறது. ஆனால், இந்த முகமூடிகள் முகத்தில் வைப்பதற்கு அல்ல; வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் முகமூடிகள். சுவர்களில் இந்த முகமூடிகளை தொங்க விட்டால், பேய், பிசாசுகள் உள்ளே வராது; வீட்டுக்கு ஐஸ்வர்யம் வந்து சேரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, நேபாளம் போய் வந்தோம் என்ற அடையாளத்துக்காகவே, நிறைய பேர், இந்த முகமூடிகளை வாங்கிச் செல்கின்றனர்.
ஜோல்னாபையன்

