/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஜாக்கி சானின் மகள் செய்த காரியத்தை பார்த்தீங்களா...
/
ஜாக்கி சானின் மகள் செய்த காரியத்தை பார்த்தீங்களா...
ஜாக்கி சானின் மகள் செய்த காரியத்தை பார்த்தீங்களா...
ஜாக்கி சானின் மகள் செய்த காரியத்தை பார்த்தீங்களா...
PUBLISHED ON : டிச 16, 2018

அடிதடி, சண்டை படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு, நடிகர் ஜாக்கி சானை தெரியாமல் இருக்காது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கை சேர்ந்த இவர், ஜப்பானிய மொழி படங்களில் மட்டுமல்லாமல், 'ஹாலிவுட்' படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது மகள், எடா நாக் சோக்கிற்கு, 19 வயதாகிறது. ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ள இந்த பெண், சில மாதங்களுக்கு முன், பெற்றோருடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது, கனடா நாட்டைச் சேர்ந்த, அட்டூன் என்ற, 34 வயது பெண்ணை, திருமணம் செய்ததாக அறிவிப்பு வெளியிட்டு, ஜாக்கிக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
தான் திருமணம் செய்த பெண்ணுடன், ஜோடியாக எடுத்த படத்தை, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் திருமணச் சான்றிதழையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, தன் ஒரே மகன், போதை பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக, சீன சிறையில், 'கம்பி ' எண்ணி வரும் நிலையில், தன் மகளும், திருமணம் என்ற பெயரில், அணுகுண்டை வீசி விட்டுச் செல்ல, மன ரீதியாக சிதறிப் போய் கிடக்கிறார், ஜாக்கி.
— ஜோல்னாபையன்.

