PUBLISHED ON : மார் 08, 2020

அ நிறம் | அளவு
மஹாராஷ்டிர மாநிலம், உல்ஹாஸ் நகரை சேர்ந்த இளம்பெண், பிரன்ஜால் பாட்டீல். இவருக்கு, 5 வயது இருக்கும் போது, கண் பார்வை மங்கத் துவங்கியது. இதனால், தன் வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படாமல் இருக்க, கடும் முயற்சி செய்து, படிப்பில் தீவிர கவனம் செலுத்தி, பட்ட மேற்படிப்பும், எம்.பில்., படிப்பையும் முடித்தார். அடுத்ததாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முடிவு செய்தார். பயிற்சி மையங்களுக்கு போகாமலேயே, 2016ல், ஐ.ஏ.எஸ்., தேர்வில், 773வது, 'ரேங்க்' பெற்றார். உடல் ஊனத்தை எண்ணி வேதனைப்படாமல், வாழ்க்கையில் முன்னேறிய இவர், இப்போது, திருவனந்தபுரத்தில், துணை கலெக்டராக பதவியேற்று இருக்கிறார்.
- ஜோல்னாபையன்.
