PUBLISHED ON : ஏப் 24, 2011

கம்யூனிச நாடு என சொல்லிக் கொள்ளும் சீனா, இப்போது அமெரிக்கா, பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, வேகமாக முதலாளித்துவ நாடாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எல்லாவிதமான பொழுது போக்கு அம்சங்களும், சீனாவில் குவிந்து வருகின்றன.
சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஷாங்காய் நகரில், அமெரிக்காவின் பிரபலமான, 'டிஸ்னி லேண்ட்' நிறுவனம், மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவை அமைக்க உள்ளது. கடந்த மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஷாங்காய் நகரில் நடந்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இந்த பூங்காவில், மிகப்பெரிய கேளிக்கை விடுதி, சூதாட்ட விடுதி, ஓட்டல்கள், பார்கள், நடன அரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் அமைய உள்ளன. இது உருவாக இன்னும், ஐந்து ஆண்டுகள் ஆகும்.
ஹாங்காங், ஜப்பானுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் டிஸ்னி லேண் டாக இது இருக்கும்.
— ஜோல்னா பையன்.
