தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாவளி ஸ்வீட்ஸ்!

தீபாவளி ஸ்வீட்ஸ்!

தீபாவளி ஸ்வீட்ஸ்!


PUBLISHED ON : அக் 23, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டபுள் கா மீட்டா - ரபடி!



தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 6

சர்க்கரை - 1 கப்

முந்திரி மற்றும் பாதாம் பருப்பு - தலா, 50 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

பால் - அரை லிட்டர்

மைதா மாவு - 1 தேக்கரண்டி

குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை: பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, அதை, முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும். மிதமாக, காய்ந்த எண்ணெயில், பிரட் துண்டுகளை பொரித்தெடுக்கவும். பின், சர்க்கரையுடன், ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கவும். பாகு சூடாக இருக்கும் போதே, பொரித்த பிரட் துண்டுகளை, அதில் தோய்த்து எடுத்து, ஒரு தட்டில் வைக்கவும்.

ரபடி செய்முறை: சிறிதளவு தண்ணீரில், மைதா மாவை கட்டியில்லாமல் கரைக்கவும். ஒரு தேக்கரண்டி பாலில், குங்குமப்பூவை கரைத்து தனியாக வைக்கவும். பின், சுண்டக் காய்ச்சிய பாலில், மைதா கரைசலை ஊற்றி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

பரிமாறும் முறை: பாலில் முக்கி எடுத்த பிரட் துண்டுகள் மீது, ரபடியை ஊற்றவும். அதன் மேலே பாதாம், முந்திரியை பொடித்து தூவி, பரிமாறவும்.

கடலைப்பருப்பு பர்பி!





தேவையான பொருட்கள்:


கடலைப் பருப்பு மற்றும் மில்க் மெயிட் - தலா 100 கிராம்

பால் - 3 கப்

நெய் மற்றும் தேங்காய்த் துருவல் - தலா அரை கப்

ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா - தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பை, மூன்று மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிக்கவும். பின், அதனுடன், இரண்டு கப் பால் சேர்த்து, நன்றாக வேக வைத்து இறக்கி, லேசாக ஆற விடவும். பின், அதை மிக்சியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும். வாணலியில், நெய் விட்டு காய்ந்ததும், அரைத்த பருப்பு விழுதை சேர்த்து, லேசாக சிவக்கும் வரை கிளறிய பின், அதனுடன், மில்க் மெயிட் கலக்கவும்.

பின், மீதமுள்ள ஒரு கப் பாலை ஊற்றி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வேக விடவும். பின், தேங்காய் துருவல், பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாக கலந்து இறக்கவும். இந்த கலவையை, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற வைத்து, துண்டுகள் போடவும்.

தேவைப்பட்டால், கடலைப் பருப்புடன், சிறிதளவு, முந்திரிப் பருப்பு சேர்த்து, அரைத்தும் செய்யலாம்.

மூங்டால் அல்வா!





தேவையான பொருட்கள்:


பாசிப் பருப்பு மற்றும் காய்ச்சி ஆற வைத்த பால் - தலா ஒரு கப்

சர்க்கரை - 2 கப்

வெண்ணெய் - 100 கிராம்

மஞ்சள் நிற புட் கலர் - ஒரு சிட்டிகை

ஏலக்காய் - 5

பொடித்த முந்திரித் துண்டுகள் மற்றும் குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை: பாசிப்பருப்பை, ஐந்து மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில், வாணலி சூடானதும், வெண்ணெயை விட்டு, அது உருகியதும் அரைத்த பாசிப்பருப்பு விழுதை சேர்த்து, அடுப்பை, 'லோ பிளேமில்' வைத்துக் கிளறவும். கலவை, பொன்னிறமாக மாறியதும், காய்ச்சி, ஆற வைத்த பால், சர்க்கரை சேர்த்து, கை விடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது, புட் கலர் சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும். அல்வா மீது, முந்திரிப் பருப்பு துண்டுகள், ஏலக்காய் போட்டு, குங்குமப்பூவைத் தூவி, பரிமாறவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us