sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வேண்டாமே ம(மா)து

/

வேண்டாமே ம(மா)து

வேண்டாமே ம(மா)து

வேண்டாமே ம(மா)து


PUBLISHED ON : டிச 08, 2013

Google News

PUBLISHED ON : டிச 08, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச., 9 - நடராஜர் தலங்களில் ஆருத்ரா தரிசனம்!

ஆருத்ரா தரிசன விழா கொண்டாடுவதன் காரணம் உங்களுக்கு தெரியுமா!

காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சாதுவன் என்ற வியாபாரியின் மனைவி ஆதிரை. இவள் சிறு வயது முதல், நடராஜ பெருமான் மேல் மிகுந்த பக்தி செலுத்தி வந்தாள். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்கு சென்றான். அங்கே, நடிகையின் அழகில் மயங்கியவன், அவள் மேல் மோகம் கொண்டு, அவள் பின்னே சென்று விட்டான். அவனிடம் உள்ள பொருட்கள் தீர்ந்ததும், அவனை விரட்டி விட்டு விட்டாள் நடிகை.

தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான், தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணி, வருந்திய சாதுவன், மீண்டும், சம்பாதிக்கத் திட்டமிட்டான். அப்போது, வங்க தேசத்தில் இருந்து வியாபாரிகள் காவிரிப் பூம்பட்டினம் வந்திருந்தனர். அவர்களைச் சந்தித்த சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச் சொன்னான். அதைக் கேட்டதும், அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப் போனது. தங்களுடன், சாதுவனைக் கப்பலில் அழைத்துச் சென்றனர்.

கப்பல் சென்று கொண்டிருந்தபோது, பயங்கரப் புயல் அடித்து, கப்பல் கவிழும் நிலை ஏற்பட்டது. மனைவிக்குத் தெரியாமல் வந்த சாதுவனுக்கு, அவள் நினைவு எழுந்தது. 'இழந்த பொருளை மீட்ட பின், மனைவியை சந்திக்கலாம் என்று அவளிடம் சொல்லாமல் வந்தோமே... ஒரு வேளை, கப்பல் கவிழ்ந்து, நான் இறந்து போனால், என் மனைவியிடம் எனக்கு உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து விடுமே...' என, எண்ணி வருந்தினான்.

இதற்குள், கப்பல், கடலில் மூழ்கி விட்டது. வியாபாரிகளை முதலைகள் விழுங்கி விட்டன. சாதுவன் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி, படுத்துக் கொண்டான்.

கணவன் எந்த இடத்தில் இருந்தாலும், நல்லபடியாக இருக்க வேண்டும் என்று, தினமும் நடராஜரை வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அந்த பிரார்த்தனையின் பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை, பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.

ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கிய செய்தியும் ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்து விட்டார் என, முடிவு செய்த ஆதிரை, அழுது புலம்பி, தன் கணவன் இல்லாத உலகில், தானும் வாழ விரும்பாமல், உயிரை மாய்த்துக் கொள்ள மயானத்திற்குச் சென்றாள். அங்கு, தீ மூட்டி, நெருப்பை வணங்கிய ஆதிரை, 'இறைவா... என் கணவன் சென்ற இடத்துக்கே நானும் செல்ல விரும்புகிறேன். இப்பிறவியில் மட்டுமல்ல, இனி வரும் பிறவிகளிலும் அவரே என் கணவராக வர வேண்டும்...' என்று, வேண்டியபடி தீயில் குதித்தாள்.

கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை, தனக்கு ஏதும் நேராததால், வருத்தமடைந்த ஆதிரை, 'இறைவா... நெருப்பு கூட தீண்ட முடியாத பாவியாகி விட்டேனா...' என்று புலம்பினாள். அப்போது வானில் அசரீரி ஒலித்து, 'ஆதிரையே... கவலை வேண்டாம். உன் கணவர் மீண்டும் வருவார்...' என்றது.

இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை, அந் நாட்டு அரசரிடம், ஒப்படைத்தனர் காவலர்கள். அவரிடம், தன் கதையை எடுத்துச் சொன்ன சாதுவன், அரசர் உண்ணக் கொடுத்த மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

சாதுவனிடம், 'நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும், மாமிசத்தையும் படைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?' என்று கேட்டார் அரசர்.

சாதுவன் ஏற்கனவே, மது, மாதுவிடம் சிக்கி வருந்தியவன் அல்லவா... அதனால், அவற்றை ஏற்க மறுத்து, 'நாம் உயிர்களைக் கொன்று மாமிசம் உண்ணக்கூடாது. இலை, காய்கறி, கனி, தானியம், கிழங்கு ஆகியவற்றை கடவுள் நமக்காக வழங்கியுள்ளார். மது குடிப்பதால், சண்டை உருவாகி, அது கொலையில் முடிகிறது...' என்று, மது, மாமிசத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கினான். அவனது கருத்தை ஏற்றார் அரசர்.

அவனை காவிரிப்பூம்பட்டினத்துக்கு, கப்பலில் ஏற்றி அனுப்பினார். மனைவியிடம் மன்னிப்பு கேட்டு, அவளோடு நீண்ட காலம் வாழ்ந்தான் சாதுவன்.

கற்புக்கரசியான ஆதிரையின் பெயருக்கு முன், 'திரு' என்ற மரியாதை அடைமொழி சேர்க்கப்பட்டது. அவளை, தன் நட்சத்திரமாக ஏற்றார் சிவன். அவளே திருவாதிரை நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள்.

தி.செல்லப்பா






      Dinamalar
      Follow us