PUBLISHED ON : டிச 11, 2022

இன்று, அனைத்து துறைகளிலும் நவீன தொழில் நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 'ஹார்மோனியம்' போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்துபவர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து விட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, அலீக்சன்ட்ரே திபைன் என்பவர், ஆக., 9, 1840ல், முதல் முதலாக காலால் மிதித்து இயங்க வைக்கும், ஹார்மோனியம் இசைக் கருவியை கண்டுபிடித்தார். 19வது நுாற்றாண்டின் இறுதியில், இந்த இசைக்கருவி இந்தியாவுக்கு வந்தது.
கிறிஸ்துவ மிஷனரி மற்றும் ராணுவ அதிகாரிகள் தான், இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். 1884ல், இந்தியா வந்த ஹார்மோனியம், பிற்காலத்தில் இன்று உள்ளது போல், உருமாற்றம் செய்யப்பட்டது. இதை பாட்டு பெட்டி என்று அழைத்தனர்.
இன்று, நவீன தொழில் நுட்ப இசைக் கருவிகளுக்கு இசை உலகம், புத்துயிர் கொடுத்து வருவதால், ஹார்மோனியம் விரைவில் காணாமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்