PUBLISHED ON : மே 28, 2017

கோழிக்கோடு மாவட்டம், எரவண்ணுாரியை சேர்ந்த, அப்துல் ஹமீது - பாத்திமா என்ற ஏழை தம்பதியின் மகன், ஷேக் ரபீக் முகமது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தற்போது, மத்திய ஆசியாவின் மிக சிறிய நாடான கிர்கிஸ்தான் நாட்டு ராணுவத்தில், உயர் பதவி வகித்து வருகிறார்.
ஐந்தாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்ட இவர், வியாபாரம் செய்து, பெரிய தொழிலதிபராக ஆக வேண்டும் என எண்ணி, 18வது வயதில் மும்பை சென்றார். பின், வியாபார நிமித்தமாக, ஈரான் மற்றும் ரஷ்யா சென்றவர், தான் நினைத்தபடியே, பெரிய தொழிலதிபர் ஆனார்.
சவுதி இளவரசருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, கிர்கிஸ்தானில் உள்ள ஒரு மாகாணத்தின் கவர்னராக இருந்த, குர்மான் பெய்கேவ் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு ஆதரவும், உதவியும் செய்தார். அவர், அதிபர் ஆன போது, ஷேக் ரபீக்கை, ராணுவ தளபதி ஆக்கினார்.
தற்போது, ஆங்கிலம், பெர்ஷியா, உருது மற்றும் ரஷ்யன் உட்பட, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார், ரபீக். ஈரான் நாட்டைச் சேர்ந்த இவரது மனைவி காதியா, மருத்துவராக பணிபுரிகிறார். ஒரே மகன், பள்ளியில் படிக்கிறான்.
— ஜோல்னாபையன்.
