தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பட்டாசு வெடித்தால் ஜாலி தான். ஆனால், நம் ஆரோக்கியம்?

பட்டாசு வெடித்தால் ஜாலி தான். ஆனால், நம் ஆரோக்கியம்?

பட்டாசு வெடித்தால் ஜாலி தான். ஆனால், நம் ஆரோக்கியம்?


PUBLISHED ON : நவ 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பட்டாசின் புகை காரணமாக, ஆஸ்துமா, மூச்சிரைப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு, அவை இன்னும் அதிகமாகும்.

* மூச்சுக்குழல் மற்றும் நுரையீரலில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். இதைத் தொடர்ந்து, தொற்று காரணமாக, தொண்டை கரகரப்பாகும். இந்தப் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, உடல், கோழையை அதிகமாக உற்பத்தி செய்யும். அதனால், சளிப் பிடித்து, அது வெளியேற ஆரம்பிக்கும்

* பட்டாசு வெடிக்கும்போது, வெளிவரும் நைட்ரஜன் ஆக்சைடு, நுரையீரல்களின் உள்ளே இருக்கிற சவ்வுகளைச் சிதைத்து விடும். அதனால், ஆக்சிஜனை உள்ளிழுப்பதில் சிரமம் ஏற்படும்

* பட்டாசு வெடிக்கும்போது வரும் சத்தம், ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு, பிரச்னையை இன்னும் அதிகரிக்கும்

* இதய பிரச்னை உள்ளவர்களுக்கு, 'ஆட்டோ பாம்' போன்ற, வெடிகளின் சத்தத்தால், 'ஹார்ட் அட்டாக்' கூட வரலாம், கவனம். இவர்கள், தங்கள் காதுகளை பஞ்சால் அடைத்துக் கொள்வது நலம்

* நாய், பூனை மற்றும் பறவைகளின் காது கேட்கும் திறன், நம்மை விட அதிகம். சிறு சத்தத்தைக் கூட அவற்றால் கேட்க முடியும். நாம் வெடிக்கிற படுபயங்கர வெடிச்சத்தம், அவற்றை செவிடே ஆக்கிவிடும்

* பட்டாசு வெடிக்கிற இடத்தில், கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக இருக்க கூடாது. அதிலிருந்து வெளிவரும் நிக்கல் உலோக புகை, வயிற்றில் இருக்கும் சிசுவின் மூளையில் பிரச்னைகளை ஏற்படுத்தி விடும்.

எதிர்பாராமல் விபத்து நேரிட்டால்...

பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராத விதமாக, நெருப்பு பட்டு தீப்பிடித்து விட்டால், அவர் மேல் தண்ணீர் ஊற்றவே கூடாது. பயத்தில், அவரை ஓட விடாமல், கனமான போர்வையால் சுற்றி, நெருப்பை அணைக்க வேண்டும்.

கண்களில் பட்டாசு நெருப்பு பட்டுவிட்டால், கை நிறைய தண்ணீர் பிடித்து, அதற்குள் கண்களை திறந்து திறந்து மூடுங்கள், இதுதான் முதலுதவி.

பிறகு, இரண்டு கண்களையும் (ஒரு கண்ணில் மட்டும் அடிப்பட்டிருந்தாலும்) சுத்தமான ஈரத்துணியால் மூடி, டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். முக்கியமாக அந்த சமயத்தில் கண்களை கசக்க கூடாது. அப்படிச் செய்தால், மிச்சம் மீதியிருக்கும் வெடிமருந்து துகள்கள் மொத்தமும் கண்ணுக்குள்ளும் பரவிவிடும்.

மோசமான நான்கு கெமிக்கல்கள்...

பட்டாசிலிருந்து வெளிவரும், ஜிங்க் - வாந்தியை வரவழைக்கும். மாங்கனீஸ் - துாக்கமின்மை, படபடப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும். பாஸ்பரஸ் - கண்களையும், கல்லீரலையும் கெடுக்கும். நைட்ரேட் - வாந்தி, வலிப்பை ஏற்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us