PUBLISHED ON : செப் 15, 2019

இந்தியாவில், முதல் முதலாக, 'கிராமபோன்' இசைத் தட்டில் பாடிய பாடகி, கவ்ஹர் ஜான். ஆர்மீனியன் நாட்டை சேர்ந்த தம்பதியினரின் மகளாக, 1873ல் பிறந்த இவர், 30வது வயதில், கிராமபோனில் முதல் பாடல் பாடி, சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
அந்த காலத்து மன்னர்களின், தர்பார்களில் பாடிய இவர், 1902ல் வாங்கிய சன்மானம், 3,000 ரூபாய். இவர், மைசூர் மன்னர் அரண்மனையில், ஒன்றரை ஆண்டு காலம் தங்கி, பாடியிருக்கிறார்.
மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்த இவர், தன் பூனை, குட்டி போட்டதை கொண்டாட, அக்காலத்திலேயே 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார்.
வில்லியம் கைஸ்பெர்க் என்ற ஆங்கிலேயர், 1902ல், கிராமபோனில் ஒரு பெண்ணின் குரல் ஒலிக்க வைக்க, கோல்கட்டா வந்தார். அன்றைய காலகட்டத்தில், பெண்கள் பொது மேடைகளில் பாடுவதற்கு முன் வரமாட்டார்கள். பல பெண்களின் குரல் கேட்டும் திருப்தி அடையாத வில்லியம், கவ்ஹர் ஜான் குரலுக்கு, ஓ.கே., சொன்னார்.
குடும்ப வாழ்க்கையில் தோல்வி அடைந்து, பல நோய்களால் அவதிப்பட்டு, 1930ல், தன், 57வது வயதில் மரணமடைந்தாலும், இசைத்தட்டு என்றாலே, இவர் பெயர் நினைவுக்கு
வரும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார்.
- ஜேல்னாபையன்.
