தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 13, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இலங்கை பிரச்னையில் 'மிதிவெடி!'

ஈழத்தில், சிங்கள ராணுவமும், விடுதலைப்புலிகளும் புதைத்து வைத்திருக்கும் கண்ணி வெடிகளை அகற்ற, குறைந்த பட்சம், இன்னும் பதினைந்து ஆண்டு களாவது ஆகும். இதை மையப்படுத்தி தற்போது, 'மிதிவெடி' என்ற பெயரில், ஒரு படம் தயாராகிறது. பாலாஜி டேனியேல், நீலிமாராணி நடிக்கும் இப்படத்தை, புலம்பெயர்ந்த தமிழரான, மயூர் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார்.

— சினிமா பொன்னையா.

பிசியான மேக்னா ராஜ்!

தமிழில் மேக்னா ராஜ் நடித்த எந்த படமும் வெற்றி பெறாததால், தற்போது மலையாளத்தில் முழுநேர நடிகையாகி விட்டார். அங்கு வினயன் இயக்கத்தில், அவர் நடித்த, 'லங்கேஸ்வரி' என்ற படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால், அரை டஜன் படங் களை கைப்பற்றியுள்ளார். இந்த நேரத்தில், 'லங்கேஸ்வரி' படம் தற்போது, 'ஜக்கம்மா' என்ற பெயரில் தமிழுக்கு, 'டப்'பாகி வருகிறது. இதனால், 'இப்படம் தமிழிலும் என்னை பிசியாக் கும்...' என, கூறுகிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும், நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.

— எலீசா.

மீண்டும் அக்கா வேடத்தில் மீனா!

திருமணத்துக்குப் பின், 'தம்பிக்கோட்டை' படத்தில், நரேனுக்கு அக்காவாக நடித்த மீனா, மீண்டும், 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் ரீ -மேக்கில், அக்கா வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை தயாரிக்கும் நடிகர் விஜய் அழைப்பு விடுத்ததும், முதல் ஆளாக வந்து ஆஜராகி விட்ட மீனா, அடுத்தடுத்து அம்மா வேடம் தவிர, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட!

— எலீசா.

விட்டுக் கொடுத்து நடிக்கும் ஜீவா!

'தாண்டவம்' படத்தில் நடித்து வரும் விக்ரம், இப்படத்தை முடித்து விட்டு, 'டேவிட்' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில், இன்னொரு ஹீரோவாக ஜீவாவும் நடிக்கிறார். 'கதைப்படி, விக்ரமை விட, சிறிய வேடம் என்றபோதும், இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், இப்படத்தை ஏற்றுக் கொண்டேன்...' என்கிறார் ஜீவா.

— சி.பொ.,

மீண்டும் ஆர்.சுந்தரராஜன்!

மெகா ஹிட் படங்களை, இயக்கியவர், ஆர்.சுந்தரராஜன். சில காலம் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் படம் இயக்கத் துவங்கியுள்ளார். 'உயிர் எழுத்து' என்ற பெயரில், அவர் இயக்கும் படத்தில், லாரன்ஸ், கீர்த்தி சாவ்லா ஜோடி சேர்ந்துள்ளனர்.

— சி.பொ.,

கவுதம் மேனன் தயாரிக்கும் புதிய படங்கள்!

'வெப்பம்' படத்தையடுத்து, ஜெய் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் கவுதம் மேனன்.இப்படத்துக்கு, 'தமிழ்ச்செல்வனும், தனியார் அஞ்சலும்' என்று பெயர் வைத்திருக்கும் கவுதம், இப்படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து, 'தமிழ்ச்செல்வனும், வருவாய்துறையும்' மற்றும் 'தமிழ்ச்செல்வனும், பொதுப்பணித்துறையும்' போன்ற பெயர்களில் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

— சி.பொ.,

மன்னிப்பு கேட்ட காம்னா!

'இதயத் திருடன்' மற்றும் 'மச்சக்காரன்' படங்களில் நடித்த காம்னா, திருப்பதி வெங்கடாசலபதியை, தன் பாய் ப்ரண்டு என்று, சமீபத்தில் பேட்டி அளித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில், எஸ்.எம்.எஸ்., மூலம் பலரும், அவருக்கு எச்சரிக்கை செய்தனர். இதனால், மிரண்டு போன காம்னா, 'நான் திருப்பதி வெங்கடாசலபதியின் தீவிர பக்தை. என் தாய் - தந்தையை போல் அவரையும் நினைப்பதால், அப்படி சொல்லி விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...' என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

— சினிமா பொன்னையா.

'விஸ்வரூபம்' படத்தையடுத்து, கமல் இயக்கி நடிக்கும் படம், 'அமர்ஹாய்' தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகிறது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us