PUBLISHED ON : டிச 09, 2012

காதல் கதையில் 'கடல்!'
கடல் படத்தில் அறிமுகமாகியுள்ள கார்த்திக்கின் மகன் கவுதம், கிறிஸ்தவ இளைஞராகவும், ராதாவின் மகள் துளசி, இந்து பெண்ணாகவும் நடித்துள்ளனர். இப்படம், கடலோர மீனவ கிராமத்து மக்களின் பிரச்னையை சொன்னாலும், காதலுக்கே முதலிடம் கொடுத்து, படமாக்கியுள்ளார் மணிரத்னம். இதில், அர்ஜுன், அரவிந்த்சாமி இருவரும், காதலர்களுக்கு உதவி செய்யும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
முதிர்ந்த வேடத்தில் தன்ஷிகா!
அரவான் படத்துக்கு பின், சரியான படவாய்ப்பு இல்லாமலிருந்த தன்ஷிகாவுக்கு,பரதேசியில் நடித்த பின், மலையாளத்தில் சில படங்கள், 'புக்' ஆகியுள்ளன. அதனால், தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ள அவர், ஒரு படத்தில் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக, தன்ஷிகாவின் பளபள முகத்தை சுருக்கம் விழுந்தது போல் மாற்றுகின்றனர். வந்த கூத்து ஆடித்தானே தீர வேண்டும்?
— எலீசா
மீண்டும் படம் இயக்கும் பிரகாஷ்ராஜ்!
தோனி படத்தை இயக்கி நடித்த பிரகாஷ்ராஜ், மலையாளத்தில் வெளியான, சால்ட் அண்ட் பெப்பர் என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளில் அடுத்து இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மூன்று மொழி ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமான இந்தி நடிகை தபு நடிக்கிறார்.
— சி.பொ.,
மினுமினுப்பு கூடிய மனீஷா!
வழக்கு எண் படத்தில், அடக்க ஒடுக்கமாக நடித்த மனீஷா, ஆதலால் காதல் செய்வீர் படத்தில், கொஞ்சம் அதிரடியாகவும், களமிறங்கியுள்ளார். குறிப்பாக, பாடல் காட்சிகளில் கவர்ச்சி உடை தரித்திருக்கும் மனீஷா, முன்பை விட, மினுமினுப்பாக இருப்பதாக செய்தி பரவ, மேலும், சில படாதிபதிகள் அவரை சுற்றத் துவங்கியுள்ளனர்.
— எலீசா
நடிப்பு ஆர்வம் குறையாத ஸ்ரீதேவி!
பதினைந்து ஆண்டுகளுக்கு பின், இங்கிலீஷ் - விங்கிலீஷ் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். 'எந்த நடிகருடன் என்றாலும் நடிப்பேன். என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ,' என்று சொல்லும் ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடிக்க விரும்புவதாக கூறுகிறார். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!
— எலீசா
'பீல்' பண்ணும் மம்மூட்டி!
தமிழில் இருந்து மலையாளத்துக்கு டப்பாகும் விஜய், அஜீத், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின், 'டப்பிங்' உரிமம், 2 கோடி முதல் 5 கோடி வரை செல்கிறதாம். ஆனால், மெகா ஸ்டார் மம்மூட்டி நடித்த மலையாள படங்களின் தமிழ் டப்பிங் உரிமமோ, வெறும், 15 லட்சத்துக்கு தான் வியாபாரமாகிறது. இதனால், 'சினிமாவில் சீனியர் நடிகராக இருந்து என்ன பயன்? இன்னும் நான் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லையே...' என்று, 'பீல்' பண்ணுகிறார் மம்மூட்டி.
— சி.பொ.,
லிங்குசாமி படத்தில் சமந்தா!
நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்துள்ள சமந்தாவை, சில இரண்டாம் தர ஹீரோக்களின் படங்கள் தேடிச் சென்றன. ஆனால், 'முன் வரிசை ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று சொல்லி, அந்த படங்களை தவிர்த்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இதனால், சமந்தா மீது இரண்டாம்தர நடிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். போகிறவன் பொன்னைத் தின்றால், இருக்கிறவன் இரும்பைத் தின்பானா?
— எலீசா
இசையமைப்பாளருக்கு ஜோடியாகும் ஸ்ரேயா!
மன்மதன் அம்பு மற்றும் சிங்கம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க, சிலர் முயற்சி எடுத்தனர். அப்போது, 'ஸ்ரேயா ஹீரோயினி என்றால், தாராளமாக நடிக்கிறேன்...' என்றாராம் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த சேதி, ஸ்ரேயாவின் காதுகளை எட்டிய போது, 'ஒரு இசையமைப்பாளர் என்னுடன் நடிக்க துடிக்கிறாரா?' என்று கேட்டு, சந்தோஷப்பட்டவர், நடிக்கவும் சம்மதம் தெரிவித்து விட்டார். சும்மா இருந்தால் சோறு ஆமா?
— எலீசா
கமர்ஷியலுக்கு மாறிய அமீர்!
ராம் மற்றும் பருத்திவீரன் என்று, யதார்த்த படங்களை, இயக்கிவந்த அமீர், தற்போது, ஆதிபகவன் படத்தை கமர்ஷியல் கதையில் இயக்கியுள்ளார். ஆனால், 'இதே பார்முலாவை தொடர மாட்டேன்...' என்று சொல்லும் அமீர், 'இதையடுத்து, கண்ணபிரான் படத்தை யதார்த்த கதைகளத்தில் இயக்க போகிறேன்...' என்கிறார்.
— சி.பொ.,
மூடு அவுட்டாகும் ஹன்சிகா!
படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டால், அன்றைக்கு எந்த மாதிரி காட்சியில் நடிக்க வேண்டுமோ அதற்கேற்ற மனநிலை, முகபாவனையுடன் காட்சி தருகிறார் ஹன்சிகா. ஒரு வேளை சோகமான காட்சியில் நடிக்கும் மன நிலையில் இருக்கும் போது, ஸ்பாட்டில் யாராவது சிரித்து பேசிக் கொண்டிருந்தால். மூடு அவுட்டாகி விடும் ஹன்சிகா, அந்த இடத்தை காலி பண்ணி, வேறு இடத்தில் அமர்ந்தபடி, தன் மூடை மெயின்டெ#ன் பண்ணுகிறார்.
— எலீசா
எஸ்.ஜே.சூர்யா போட்ட கண்டிஷன்!
இசை படத்தை இயக்கி, நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவை, மீண்டும் நடிப்பதற்கு சில இயக்குனர்கள் அழைத்தனர். அதற்கு, 'இசை படத்தை நல்ல படியாக இயக்கி, ஹிட் செய்த பிறகு தான், மற்றவர்களின் இயக்கத்தில் நடிப்பேன்,' என்று கூறிவிட்டார். அதோடு, 'கதையிலும், என் பாணிக்கேற்ப சில மாற்றங்களை செய்வேன். அதற்கு உடன்படும் இயக்குனர்களுக்கு மட்டுமே, கால்ஷீட் தருவேன்...' என்றும், உறுதியாக சொல்கிறார்.
— சி.பொ.,
நேட்டிவிட்டி நாயகன் சசிகுமார்!
போராளி படத்துக்கு பின், தனக்கு ஆக்ஷன் கதைகள் செட்டாகாது என்பதை புரிந்து கொண்ட சசிகுமார், இனி, சுந்தரபாண்டியன் போன்று, காதல், காமெடி கதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாக சொல்கிறார். அதோடு, ஈசன் மாதிரி சிட்டி சப்ஜக்ட்டுகளை தவிர்த்து, நேட்டிவிட்டி கதைகளில் மட்டுமே நடிக்க @பாவதாக கூறுகிறார். சேதியறிந்து, மண்வாசனை கதைகளுடன் சில இயக்குனர்கள் அவரை முற்றுகை இட்டுள்ளனர்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
