தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : மே 26, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசியல் படமெடுக்கும் கே.பாக்யராஜ்!

திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்த போதும், தன் மகள் சரண்யாவை வைத்து இயக்கிய, பாரிஜாதம், மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய சித்து ப்ளஸ்2 ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால், அதன் பின் படமே இயக்காமல் இருந்தார் கே.பாக்யராஜ். ஆனால், இப்போது தன் வழக்கமான பேமிலி செண்டிமென்டை கடந்து, அரசியலை நையாண்டி செய்யும் வகையில், துணை முதல்வர் அன்னப் போஸ்ட் என்றொரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாக்யராஜ், அதில் நடிக்க சில பிரபல நடிகர்களிடம் பேசி வருகிறார்.

— சினிமா பொன்னையா

ஈகோ இல்லாத பூர்ணா!

இரண்டு ஹீரோயின்கள் ஒரு படத்தில் நடித்தாலே, அங்கே ஏதாவது ஒரு ரூபத்தில், 'ஈகோ' போர் வெடித்து விடும். ஆனால், பூர்ணா மற்ற நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் படங்களில், அப்படி நடப்பதில்லை. காரணம், மற்றவர்கள் தன் மீது, 'ஈகோ' பார்வை வீசி, வம்புக்கு இழுத்தாலும், அதை கண்டு கொள்வதில்லை பூர்ணா. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் செய்கிறேன். இதில், நான் பெரிய நடிகை, நீ பெரிய நடிகை என்று சொல்வதில், எந்த அர்த்தமும் இல்லை என்று, மெச்சூரிட்டியாக பேசி, உடன் நடிக்கும் மற்ற நடிகைகளையும் யோசிக்க வைக்கிறார். நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை பேசு!

— எலீசா

அஞ்சலியுடன் ஜோடி சேர விரும்பும் மகேஷ்!

அங்காடித்தெரு படத்தில், அஞ்சலியுடன் நடித்த மகேஷûக்கு மீண்டும் அஞ்சலியுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இது விஷயமாக ஒரு முறை அவர் அஞ்சலியிடம் தெரிவித்த போது, 'சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்...' என்றிருக்கிறார். அதனால், அந்த சந்தர்ப்பத்தை தானே உருவாக்கி, மீண்டும் அஞ்சலியுடன் டூயட் பாடி விட வேண்டும் என்று, சில படாதிபதிகளிடம், 'அஞ்சலியிடம் கால்ஷீட் வாங்கித் தருகிறேன். எங்களை இணைத்து படமெடுங்கள்...' என்று கேட்டுக் கொண்டு வருகிறார் மகேஷ்.

— சி.பொ.,

காஜலை வீழ்த்திய மூன்று நடிகைகள்!

துப்பாக்கி ஹிட்டுக்கு பின் கோலி வுட்டில் பேசப்படும் நடிகையாகி விட்ட காஜல் அகர்வாலுக்கு, சமந்தா, அமலா பால், அஞ்சலி போன்ற நடிகைகளின் ஆதிக்கம் காரணமாக தற்போது தெலுங்கு மார்க்கெட் சரிவில் உள்ளது. அதனால், தமிழில் அதிரடியாக பிரவேசித்து, மார்க் கெட்டை கைப்பற்ற திட்டம் தீட்டி வருகிறார். விஜய்யுடன், ஜில்லா படத்தில் நடிப்பவர், அஜீத், சூர்யா போன்ற நடிகர்களுடன், நடிக்கும் வாய்ப்பினை பெறவும், திரைக்குப் பின்னால் தீவிர முயற்சியை முடுக்கி விட்டுள்ளார். காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை!

— எலீசா

இயக்குனர் ஆசையில் சித்தார்த்!

உதயம் என்.எச்4 ஓடவில்லை என்றாலும், தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார் சித்தார்த். இந்த படத்திற்கு பின், தமிழில் தன் மார்க்கெட் சூடு பிடித்து விடும் என்பவர், அதன் பின் கோலிவுட்டில், தானும் பேசப்படும் நடிகராகி விடுவேன் என்கிறார். அப்படி தனக்கென ஒரு இடம் கிடைத்தபின், தன் சொந்த கதையில், ஒரு படத்தை தானே இயக்கி, நடிப்பேன் என்கிறார் சித்தார்த்.

— சி.பொ.,

அடுத்த கட்ட நடவடிக்கையில் ஆண்ட்ரியா !

தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்தும் ஆண்ட்ரியாவின் படக்கூலி எகிறவில்லை. அதனால், விஸ்வரூபம்-2 படத்தை முடித்ததும், ஆந்திராவில் கொடியேற்றப்போகிறார் ஆண்ட்ரியா. முன்னதாக, சேட்டை படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான, தடகாவில் தமிழில், சமீரா ரெட்டி நடித்த வேடம் மூலம், அங்கு அழுத்தமாக கால் பதித்து விடுவேன் என்று சொல்லும் ஆண்ட்ரியா, மார்க்கெட் சூடுபிடித்ததும், கோடிக்கணக்கில் கூலியை உயர்த்தவும் பிளான் வைத்துள்ளார். தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்!

—எலீசா

ஒரே பாடலில் நடித்த 18 பிரபலங்கள்!

கருணாஸ், ஷெரில் பிரிண்டோ ஜோடி சேர்ந்துள்ள படம், மச்சான். இப்படத்தில், இடம் பெறும் ஒரு பாடலில் பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, பரத், விமல், ஸ்ரீகாந்த், விதார்த், விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சாந்தனு, சிவா, கோவை சரளா, விஜய் ஆண்டனி, சத்யன், சூரி, திரு, தம்பி ராமைய்யா, பவர் ஸ்டார், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் தோன்றி, நடனமும் ஆடியுள்ளனர். இதில் சிவா, நடித்ததற்கான கூலியே பெறவில்லை.

— சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us