sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 21, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமலை இயக்கும் ரமேஷ் அரவிந்த்!

விஸ்வரூபம் -2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், உத்தம வில்லன் என்ற படத்தை இயக்கி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அப்படத்தை கமலை வைத்து நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக கூறுகின்றனர். ஏற்கனவே, கமலுடன், சதிலீலாவதி, பஞ்சதந்திரம் மற்றும் மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரமேஷ் அரவிந்த், அந்த படங்களைப் போன்று, ஜாலியான காமெடி கதையில், இப்படத்தை இயக்குகிறார். அப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்ட நிலையில், இப்போது வேறு சில முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சினிமா பொன்னையா

அம்மாவுக்கு கண்டிஷன் போட்ட ஹன்சிகா!

த்ரிஷாவின் அம்மா, உமாவை போலவே, ஹன்சிகாவின் அம்மாவும், அவரை எப்போதும் நிழல்போல் தொடர்ந்து வருகிறார். மேலும், ஸ்பாட்டில் மகளை விட, ஹீரோக்களுடன் அதிகமாக கடலை போடுவதும் அவர்தான். இதனால் ஆர்யா, சித்தார்த் உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு ஹன்சிகாவை விட, அவரது அம்மாவைதான் ரொம்ப பிடிக்கும், எப்போதும் ஜாலியாக பேசிக்கொண்டேயிருப்பார் என்று, அவரை பெருமையாக பேசி வருகின்றனர். இதனால், டென்ஷனான ஹன்சிகா, 'ஸ்பாட்டில் யாருடனும் அதிகமாக வாயாடக் கூடாது...' என்று அம்மாவுக்கு அதிரடி கண்டிஷன் போட்டுள்ளார். வாயைக் காத்தால், தாயைக் காக்கலாம்!

எலீசா

தனுஷின் சமையல் ஆர்வம்!

அஜீத்தைப் போலவே, தனுஷும், சமையல் கலையில் வல்லவர். ஓட்டல்களில் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டால், அங்குள்ள ஊழியர்களிடம், 'என்னென்ன பொருட்களை கொண்டு, இதை சமைத்தீர்கள்...' என்று கேட்டறிந்து வீட்டிலும், அதை சமைத்து அசத்துவார். அந்த அளவுக்கு, சமையல் கலையில் தனக்கு மிகுந்த ஆர்வம் என்று சொல்லும் தனுஷ், சினிமாவுக்கு வராமல் இருந்தால், சமையல் கலைஞராகி இருப்பாராம்.

சி.பொ.,

கார்த்திகாவை டீலில் விட்ட திரையுலகம்!

அன்னக்கொடி படத்தில், அரை நிர்வாண காட்சிகளிலெல்லாம் நடித்திருந்தார் கார்த்திகா. ஆனாலும், படம் பேசப்படாததால் அவரது நடிப்பும் எடுபடவில்லை. அதனால், இந்த படத்தின் ரிலீசுக்கு பின் கோலிவுட் சினிமா தன்னை, தலையில் தூக்கி வைத்து கொண்டாடப் போகிறது என்று, கனவு கண்டு வந்த கார்த்திகா கலங்கிப்போய் நிற்கிறார். கைவசம், ஏற்கனவே அருண் விஜய்யுடன் நடித்து வந்த, டீல் படம் மட்டுமே உள்ளதால், அடுத்து தமிழை நம்பாமல் மலையாளம், தெலுங்கு என்று இடம் பெயரத் துவங்கி விட்டார். ஆல் பழுத்தால் அங்கே கிளி, அரசு பழுத்தால் இங்கே கிளி!'

எலீசா

சிக்ஸ் பேக்குக்கு மாறும் ஆந்திர ஹீரோக்கள்!

தமிழ் சினிமா ஹீரோக்களான சிம்பு, விஷால், பரத் என பலரும், சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி, நடித்து வருவதால், இப்போது ஆந்திர ஹீரோக்களும் சிக்ஸ் பேக்குக்கு மாறி வருகின்றனர். அதில், முதல் நபராக பிரபுதேவாவின், ராமையா வஸ்தவய்யா படத்தில் நடித்துள்ள, ஜுனியர் என்.டி.ஆர்., அப்படத்தின், க்ளைமேக்ஸ் காட்சிக்காக சிக்ஸ் பேக்குக்கு மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூன் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோரும், அடுத்தடுத்து சிக்ஸ் பேக்குக்கு மாறுகின்றனர்.

சி.பொ.,

விஜயசாந்திக்கு பின் அனுஷ்கா!

விஜயசாந்திக்கு பின், எந்த ஹீரோயினிகளையும் பெரிதாக நம்பாத திரையுலகம், அருந்ததீ புகழ் அனுஷ்காவை நம்ப துவங்கியுள்ளது. தற்போது, முழுக்க முழுக்க அவரை முதன்மைப்படுத்தி, ராணி ருத்ரம்மா தேவி என்ற சரித்திர படத்தை, 40 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர். இதில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட ஆபரணம், உடை போன்ற பொருட்களுக்காக மட்டுமே, ஐந்து கோடிக்கு மேல் செலவு செய்திருப்பதோடு, அவரது படக்கூலியையும், இரண்டு கோடியில் இருந்து, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தி விட்டனர். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை!

எலீசா

தாதாக்களை அழிக்கும், தலைவா விஜய்!

விஜய் நடித்துள்ள, தலைவா படத்துக்கு, முதலில் தலைவன் என்று தான் பெயர் வைத்திருந்தனர். அதே பெயரில், இன்னொரு படம் வளர்ந்து வந்ததை அறிந்து, தலைவா என்று மாற்றினர். இந்நிலையில், 'அந்த டைட்டிலே அரசியல் தொனியில் உள்ளதே... அப்படியென்றால், தலைவா அரசியல் படமா?' என்று அப்பட டைரக்டர் விஜய்யிடம் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு, 'இது தாதாக்களை, ஒருவன் அழிக்கும் கதை. அப்படி அழித்து சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுப்பதால், அம்மக்கள் விஜய்யை தங்களது தலைவனாக்கி வருகின்றனர்...' என்று சொல்லும் டைரக்டர் விஜய், இப்படத்துக்கும், அரசியலுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்.

சினிமா பொன்னையா

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us