தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 26, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அசில் - சனுஷா நடித்துள்ள நந்தி படத்தில், திடீரென்று மலேஷியாவைச் சேர்ந்த நோரா, தனுஷியா என்ற இரு மாடல் அழகிகளை ஒரு பாடல்  காட்சியில் ஆட வைத்துள்ளனர். காரணம், இப்படத்தின் பிரிமியர் ÷ஷா சென்னையில் நடப்பது போலவே மலேஷியாவிலும் நடைபெற உள்ளதாம்.  அதனால், மலேஷிய ரசிகர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அங்குள்ள அழகிகளை, 'நந்தி' படத்தில் ஆட வைத்துள்ளதாக அப்பட யூனிட் தெரிவிக்கிறது.

முழுக்க நனைந்த உதயதாரா!

பொத்தி பொத்தி நடித்து வந்த உதயதாராவை, 'விலை' படத்தில் தோலுரித்து விட்டனர். இதனால், முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் அடுத்து நடிக்கவுள்ள, 'பிரம்மபுத்ரா'வில் கவர்ச்சிப் புயலாக களமிறங்க தயாராகி வருகிறார். நடிகையின் இந்த திடீர் முடிவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளது கோடம்பாக்கம். நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று!     — எலீசா.

ஹீரோ இமேஜ் பிரசன்னா யோசனை?

ரொமான்டிக் ஹீரோ ஆக வேண்டுமென்று பீல்டுக்குள் வந்த பிரசன்னா, ஆசைக்காக, 'அஞ்சாதே' படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால், அதுவே இப்போது அவரை முழு வில்லனாக்கி விட்டுள்ளது. ஹீரோ வாய்ப்புக்காக டைரக்டர்களை நாடினால், இனி உங்களுக்கு ஹீரோ வேஷம் செட் ஆகாது என்று சொல்லி, வில்லன் வேடமே தருகின்றனராம். இதனால், மீண்டும் ஹீரோ இமேஜை உருவாக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்.  — சி.பொ.,

மம்தா தமிழ் வெறி!

சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களில் நடித்த மம்தாவுக்கு, 'ஆதிபகவன்' படத்தில் நாயகி வேடம் கிடைத்துள்ளது. இதனால், நடிக்கயிருந்த சில மலையாளப் படங்களை கூட ஓரங்கட்டி விட்டு ஓடோடி வந்துள்ள மம்தா, 'இப்படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டியாவது, தமிழில் மார்க்கெட்டை பிடிப்பதே என் நோக்கம்...' என்று வெறி கொண்டு நிற்கிறார். நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது!   — எலீசா.

அஞ்சலியை பீல் பண்ண வைத்த  ஹீரோக்கள்!

'அங்காடித்தெரு' படத்துக்கு பிறகு தன் மார்க்கெட் எகிறிவிட்டதால், படக் கூலியையும் தடாலடியாக உயர்த்தி விட்டார் அஞ்சலி. அதோடு, கேரவன், ஸ்டார் ஓட்டலில் தங்கும் அறை என்றெல்லாம் முன்வரிசை நடிகைகளுக்கு இணையாக தன் ரேஞ்சை உயர்த்திக் கொண்டுள்ளார். இப்படி உயர்த்தியபோதும் இன்னமும் அவர் எதிர்பார்க்கும் முன்வரிசை ஹீரோக்களின் பட வாய்ப்புகள்தான் கிட்டவில்லை. அதுகுறித்து அடிக்கடி, 'பீல்' பண்ணியும் வருகிறார். ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!   — எலீசா.

பிரண்ட்ஷிப்பை தொடரும் மாஜி ஹீரோ!

பல ஹிட் படங்களை 1980-90களில் கொடுத்தவர் நடிகர் சுரேஷ். இப்போது, சில படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வரும் அவர், தன் மாஜி ஹீரோயின்களான நதியா, ரேவதி, சுலக்ஷனா ஆகியோரிடம் இப்போதும் பிரண்ட்ஷிப் வைத்துள்ளார். இவர்களை சந்தித்தால் மலரும் நினைவுகளில் மூழ்கி விட, கலகலப்புக்கு பஞ்சமே இருக்காதாம்.  — சி.பொ.,

மீண்டும் வீரப்பன் கதை!

சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய கதை, 'தம்பி ஊருக்கு புதுசு' என்ற பெயரில் தயாராகிறது. அதுமட்டுமின்றி, வீரப்பனின் பங்காளிகளான சின்னச்சாமி, கழியன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்காக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை சந்தித்து, இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல புதிய தகவல்களை தான் சேகரித்திருப்பதாக சொல்கிறார் இப்பட இயக்குனர் தணிகை பாரதி. — சினிமா பொன்னையா.

மீண்டும் ஜெயப்ரதா!

கமலுடன், 'தசாவதாரம்' படத்தில் ஒரு கெட்-டப்புக்கு ஜோடியாக நடித்தவர் மாஜி ஹீரோயின்

ஜெயப்ரதா. அந்தப் படத்தில் நடித்தபோது, 'விரைவில் என் பேனரில் தமிழில் ஒரு படம் தயாரிப்பேன்!' என்று கூறிய ஜெயப்ரதா, இப்போது, தமிழை விட்டு விட்டு, மலையாளத்தில் முகேஷை நாயகனாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறார். அதோடு, படத்தில் ஹீரோவுக்கு இணையான ஒரு வெயிட் ரோலிலும் நடிக்கிறார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!          — எலீசா.

ஜீவா ஒத்திகை!

'கச்சேரி  ஆரம்பம்' சறுக்கி விட்டதால், 'சிங்கம்புலி' படத்தில் சீரியசாக நடித்து வருகிறார் ஜீவா. முக்கியமாக, கதைப்படி டபுள் ரோலில் நடிக்கும் அவர், கெட்டப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல், 'வாலி' பட அஜீத் போல் ஒரே மாதிரியான தோற்றத்தில் நடிக்கிறார். இதனால், மாறுபட்ட நடிப்பின் முலமே இரண்டு ரோல்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும் என்பதால், ஒன்றுக்கு பலமுறை ஒத்திகை பார்த்த பிறகே ஸ்பாட்டில் ஆஜராகிறார்.

— சி.பொ.,

த்ரிஷா கைவிரிப்பு!

போதைப் பொருள் விவகாரத்துக்கு பிறகு தென்னிந்திய சினிமா மீதே வெறுப்பில் இருக்கிறார் த்ரிஷா. அதனால், சில காலம் மும்பையிலேயே முகாமிட்டு நடிக்க திட்டமிட்டுள்ள த்ரிஷா, தமிழ், தெலுங்கு சினிமா சம்பந்தமாக யாராவது தொடர்பு கொண்டால், 'அடுத்த ஆண்டு முழுக்க இந்தி படங்களுக்கே கால்ஷீட் கொடுத்திருக்கிறேன்; அதனால், இப்போதைக்கு கால்ஷீட் இல்லை...' என்று கைவிரித்து வருகிறார்.  — எலீசா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us