தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சஸ்பென்ஸ் வைக்கும் கவுதம் மேனன்!

அஜித்தின், 55வது படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வேடம் என்று கூறியவர், முந்தைய படங்களில் நடித்த நரைமுடி ஹேர் ஸ்டைல் இந்த படத்தில் இருக்காது என்று, முன்பு சொல்லி வந்தார். ஆனால், தற்போது அதே, 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்புடன் தான் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். இதுபற்றி கவுதம் மேனனைக் கேட்டால், 'இரண்டு கெட்டப்பில் இதுவும் ஒன்று; இதன்பின் தான் அந்த, 'யூத்' கெட்டப்பை படமாக்க உள்ளேன்...' என்று கூறியவர், 'இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கவிருப்பதால், ஒரு மாற்றம் செய்திருக்கிறேன். அதாவது, ஒரு வேடத்தில் இரண்டு விதமாக வருகிறாரா இல்லை, இரண்டு வேடங்களிலேயே நடிக்கிறாரா என்பதில், ஒரு சின்ன டுவிஸ்ட் வைத்திருக்கிறேன். அதை படம் திரைக்கு வரும் வரை, சஸ்பென்சாக வைக்கப் போகிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா.

சமந்தாவை பாதித்த குயின்!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, இந்தியில் வெளியாகும் படங்களை தவறாமல் பார்த்து விடுகிறார். அப்படி, கங்கனா ரணாவத் நடித்த, குயின் என்ற படம் பார்த்த போது, அப்படம் அவரை வெகுவாக பாதித்து விட்டது. அதனால், அப்படத்தின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ள சமந்தா, அதில், கங்கனா நடித்த வேடத்தில், தான் நடிக்க முடிவு செய்துள்ளார். படத்தை தயாரிக்க, சரியான படாதிபதி கிடைக்காத பட்சத்தில், அப்படத்தை, தானே தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். தன் காரியம் என்றால், தன் சீலையும் பதைக்கும்!

— எலீசா

நடிகை அலியா பட்டை துரத்தும் தனுஷ்!

ராஞ்ஜனா படத்தில் நடிப்பதற்காக, பாலிவுட்டுக்கு சென்ற இடத்தில், அங்குள்ள அலியா பட்டின் அழகுக்கும், திறமைக்கும் அடிமையாகி விட்டார் தனுஷ். அதனால், அவருடன் ஒரு படத்திலேனும், டூயட் பாடி விட வேண்டுமென்று துடிப்பவர், வெற்றி மாறன் இயக்கத்தில், தான் நடிக்கவிருக்கும் படத்திற்கு அலியா பட்டை, 'புக்' செய்ய, முட்டிக் மோதிக் கொண்டிருக்கிறார். ஆனால், விஜய்யின் கத்தி மற்றும் அஜித்தின் புதிய படங்களில் நடிக்கவே மறுத்து விட்ட அலியா பட், தனுஷின் வேண்டுகோளை தொடர்ந்து, அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார். இருப்பினும், எறும்பு ஊற கல்லும் தேயும் என்று, தொடர்ந்து அம்மணியிடம் முயற்சி செய்து வருகிறார்.

— சி.பொ.,

ஹன்சிகாவை டென்ஷன் செய்யும் சிம்பு!

வாலு படத்தில் நடித்த போது, சிம்புவுடன் காதல் வளர்த்த ஹன்சிகா, அப்படம் இறுதி கட்டத்தை நெருங்கிய நேரத்தில், அவருடனான காதலை முறித்துக் கொண்டார். அதனால், இப்போது, அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில், நடிக்கவும் மறுத்து வருகிறார். இதனால், இந்த விவகாரத்தை பெருசுபடுத்தி, ஹன்சிகாவை தொடர்ந்து தமிழில் நடிக்க விடாமல் செய்து விடவேண்டும் என்று, அவர் மீது புகார் அளித்துள்ளார் சிம்பு. இதனால், கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ஹன்சிகா, 'நான், வாலு படத்திற்கு ஏற்கனவே, கொடுத்த கால்ஷீட்டை, வீணடித்தது அவர்கள் தான்...' என்று, இப்போது புகாரை சிம்பு பக்கம் திருப்பி விட்டு, பேச்சு வார்த்தைக்கு உடன்படாமல், நழுவி வருகிறார்.

— சினிமா பொன்னையா.

கறுப்பு பூனை!

சமீபத்திய படங்களில், கவர்ச்சிக்கு ஓரளவு கட்டுப்பாடு வைத்து நடித்து வரும் பப்ளிமாஸ் நடிகை, தன்னை படங்களுக்கு, 'புக்' செய்ய வரும் படாதிபதிகள் முன், ஆபாச நடிகையாட்டம் காட்சி கொடுக்கிறாராம். அதில் அசந்து போகும் அவர்கள், மந்திரிச்சி விட்ட கோழியாகி, அம்மணி கேட்கும் சம்பளத்திற்கு தலையாட்டி, ஜொள் விட்டுக் கொண்டே, வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

தலைவா இயக்குனருக்கு, கழுத்தை நீட்ட தயாராகி விட்ட பால் நடிகைக்கு, பல மொழிகளிலும் பாய் பிரண்ட்ஸ் உள்ளனர். ஆனால், இனிமேலும் அவர்களுடனான நட்பை தொடர்ந்தால், சிக்கலாகி விடும் என்பதால், அவர்களை துரத்தியடித்து வரும் நடிகை, விரைவில், தன் தொடர்பு நம்பர்கள் அனைத்தையும் துண்டித்து, தொடர்பு எல்லைக்கு அப்பால், செல்லப் போகிறார்.

சேட்டை நடிகரின் பாசறையில் இருந்து தாரா நடிகை வெளியேறியதை அடுத்து, அவரது இருப்பிடத்திற்குள், சில இளவட்ட ஹீரோக்கள், அத்துமீறி நுழைந்து விடுகின்றனர். அதோடு, நாள் முழுக்க குடி, குடித்தனம் என்று, அங்கேயே முகாமிட்டு, அம்மணியை டென்ஷன் செய்கின்றனர். இதனால், இப்போதெல்லாம் ஒருநாள் படப்பிடிப்பு இல்லை என்றாலும், கேரளாவுக்கு, 'எஸ்கேப்'பாகி விடுகிறார் தாரா.

துளிகள்!

* கடின உடற்பயிற்சி செய்து, உடம்பை ஸ்லிம் செய்துள்ள ஹன்சிகா, சமீபகாலமாய், மதிய தூக்கத்துக்கு, 'குட்பை' சொல்லி வருகிறார்.

* தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் டைரக்டர் விஜய்யை, கிறிஸ்துவ மதத்துக்கு மாற, கேட்டுக் கொண்டு வருகிறார் அமலாபால்.

* சிம்புவுடன், நயன்தாரா நடித்து வரும், இது நம்ம ஆளு படம் கிடப்பில் போடப்பட்டிருப்பதால், அப்படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை, தனி ஒருவன் படத்திற்கு, கொடுத்து விட்டார் நயன்தாரா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us