தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஆக 31, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

எலியாக மாறும் புலிகேசி வடிவேலு!

வடிவேலு அதிக எதிர்பார்ப்புடன் நடித்த படம், தெனாலிராமன். அப்படம் படுதோல்வியடைந்ததால், அடுத்தபடியாக அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இருப்பினும், தற்போது ஒரு தயாரிப்பாளரை பிடித்து, தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜின் இயக்கத்திலேயே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு. 1970களில் மேற்கத்திய கலாசாரம் இந்தியாவில் பரவிய போது நடந்த சில சம்பவங்களை வைத்து இப்படம் தயாராகிறது. இப்படத்திற்கு, 'புலி என்று பெயர் வைக்கலாம்...' என பலரும் சொன்னபோது, 'அதெல்லாம் வேண்டாம்; எலி என்று வைப்போம்; என் போன்ற காமெடியனுக்கு, அம்மாதிரி தலைப்பு வைத்தால் தான் பொருந்தும்...' என்று சொல்லி விட்டார் வடிவேலு. இப்போது எலிக்கு எதிரியான பூனை வேடத்தில் நடிக்க, வில்லனை தேடுகின்றனர்.

— சினிமா பொன்னையா.

ஆதரவு கோரும் ஷெரீன்!

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர்தான், ஷெரீன். அதையடுத்து, சில படங்களில் நடித்த அவர், பீமா படத்தில், விக்ரமுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய பின் சில ஆண்டுகளாக அவரைக் காணவில்லை. தற்போது, திகில் என்ற படத்தில், ரீ - என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்த வேகத்தில், அடுத்தடுத்து சில பட வாய்ப்புக்களை கைப்பற்றி விட வேண்டும் என்று கோலிவுட்டில் சுற்றிக் கொண்டு திரியும் ஷெரீன், தன் அபிமானத்திற்குரிய தனுஷ், சிம்பு உள்ளிட்ட சில இளவட்ட நடிகர்களிடமும் சிபாரிசு கோரியுள்ளார். போயும் வந்தும் பொன்னம்பலம்; திரும்பி வந்தும் திருவம்பலம்!

— எலீசா

நடிப்புக்கு முழுக்கு போடும் பாவனா!

'கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்...' என்ற கொள்கையை கடைபிடித்து வந்தவர் பாவனா. தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான் மற்றும் அசல் என, பல படங்களில் நடித்த அவர், பின் தெலுங்கு மற்றும் மலையாளப்பட நடிகையானார். ஆனால், கவர்ச்சி விஷயத்தில் அவர் தொடர்ந்து கண்டிஷனாக இருந்து வருவதால், அவருக்கு புதிய பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால், தான் காதலித்து வந்த மலையாள நடிகர் அனூப் மேனனை விரைவில் திருமணம் செய்து, சினிமாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள பாவனா, தற்போது நடித்து வரும் கன்னட படத்தை வேகமாக முடித்துக் கொடுக்க முனைந்துள்ளார். தன் நோய்க்கு தானே மருந்து!

— எலீசா

ஹன்சிகா அடுத்த திட்டம்!

சிம்புவை விட்டு பிரிந்த பின், மறுபடியும் மேல்தட்டு கதாநாயகர்களுடன் ஜோடி சேர முண்டியடித்தார் ஹன்சிகா. ஆனால், இரண்டாம் தட்டு கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே அவருக்கு கிடைத்து வருகின்றன. அதனால், இப்போது கை வசம் இருக்கும் கதாநாயகர்களை கெட்டியாக பிடித்துக் கொள்ள விரும்பும் ஹன்சிகா, மான் கராத்தே படத்தில் தன்னுடன் நடித்த சிவகார்த்திகேயனையும், தன் பட்டியலில் இடம்பெறச் செய்திருப்பவர், அவர் நடிக்கும் புதிய படங்களில் இடம் பிடிக்கவும், திரைக்குப் பின்னால் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அவரவர் அக்கறைக்கு அவரவர் படுவர்!

— எலீசா

ராஜ்கிரணுக்கு போட்டியான சமுத்திரக்கனி!

சமீபகாலமாக ராஜ்கிரண் தான், பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு அப்பாவாக நடித்து வந்தார். அவருக்கு போட்டியாக சில படங்களில் நாசரும் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்து, கைதட்டல் பெற்றார் இயக்குனர் சமுத்திரக்கனி. இதையடுத்து, சில அப்பா வேடங்கள் அவர் பக்கம் சென்று கொண்டிருக்கின்றன. ஓரளவு இளமையான அப்பா என்பதோடு, சம்பள விஷயத்தில் கறார் செய்யாமல் கொடுப்பதை வாங்கிக் கொள்பவர் சமுத்திரக்கனி என்பதால், பட அதிபர்களும் அவர் பக்கம் சாயத் துவங்கியுள்ளனர். இதனால், ராஜ்கிரணுக்கு வர வேண்டிய இரண்டு படங்கள், இப்போது சமுத்திரக்கனியின் கையில் சிக்கியிருக்கிறது.

—சினிமா பொன்னையா.

கருப்பு பூனை!

ஓரெழுத்து படத்தில் நடித்துள்ள அந்த ஹாலிவுட் நடிகை. தன், 'டாப்லெஸ்' புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டதால்,

அவர் மீது கடுப்பாகி விட்டார் பிரமாண்ட இயக்குனர். அதையடுத்து, 'இனிமேல் யாரும் இவரை நடிக்க வைக்காதீர்கள்...' என்று கோலிவுட் வட்டாரங்களில், நடிகைக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் மூன்றெழுத்து படத்தை தயாரித்தவர், அப்படத்தில் நடித்த மலையாள நடிகை தன் கணவருடன், ஓட்டலில் டேரா போட்டதால், எனக்கு கூடுதலாக, 50 லட்சம் வரை பணம் விரயமாகி விட்டது என்று நடிகை மீது குற்றம் சாட்டியிருந்தார். இதனால் நடிகையை அடுத்து ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்ய இருந்தவர்கள், பின்வாங்கி விட்டனர். இதன் காரணமாக, தன் மீது குற்றம் சாட்டிய அந்த தயாரிப்பாளரை, கண்டபடி விமர்சித்து வருகிறார் மலையாள நடிகை.

துளிகள்!

* ஐ படத்தில் நடித்து முடித்து விட்ட எமி ஜாக்சன், தற்போது லண்டனில் விளம்பர படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

* விமலுடன் புலிவால் படத்தில் நடித்த அனன்யா, தனக்கு சிபாரிசு செய்யுமாறு விமலைக் கேட்டு வருகிறார்.

* விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவிடம் பேசும் டயலாக்குகளை மீண்டும், இது நம்ம ஆளு படத்துக்காக

நயன்தாராவிடம் பேசி நடித்துள்ளார் சிம்பு.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us