தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல ...

இதப்படிங்க முதல்ல ...

இதப்படிங்க முதல்ல ...


PUBLISHED ON : அக் 31, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கையை  சுட்டுக் கொண்ட ஹீரோக்கள்!

'அகம்புறம்' படத்தில், சொந்த காசைப் போட்டு நடித்த ஷாம், அந்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல், 'திருத்தணி' படத்தை மறைமுகமாக தயாரித்த பரத்தும், படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால், கையை சுட்டுக் கொண்டு கிடக்கிறார். ஆக, இந்த நடிகர்களின் நிலையைப் பார்த்து சொந்த படம் தயாரித்து, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள நினைத்த சில நடிகர்கள் பின்வாங்கி விட்டனர். -  சினிமா பொன்னையா.

விக்ரம்  சென்டிமென்ட்!

விக்ரமிடம் கதை சொல்லும் இயக்குனர்கள், இரண்டு எழுத்தில் டைட்டில் சொன்னால் கதையை கேட்கும் முன்பே குஷியாகி விடுகிறார். காரணம், 'நான் நடித்த சேது, காசி, தில், தூள், சாமி என அத்தனை படங்களுமே ஹிட்தான். அதனால், என் படங்களின் வெற்றியை  டைட்டில்களே கூடுமானவரை தீர்மானித்து விடும்...' என்று சொல்லும் விக்ரம், இப்போது நடித்து வரும் வெடி படமும் வெற்றி பெறுவது உறுதி என்கிறார். -  சி.பொ.,

ஸ்ரேயாவுக்கு  அப்பாவாக நடித்த  பட்டிமன்றம் ராஜா, இப்போது, 'ஊலலலா' படத்திலும் அப்பட நாயகி  ப்ரீத்தி பண்டாரிக்கு அப்பாவாக  நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில்,  'சினிமாவில் அழகான பெண்களுக்கு என்னை அப்பாவாக்கி விடுகின்றனர்.  அதனால், கேரக்டரோடு ஒன்றிப் போகும் என்னால், அவர்களை ரசிக்கக் கூட முடியவில்லை...' என்கிறார்.

காம்னாவின்  அதிரடி பிரவேசம்!

மச்சக்காரன், இதயத் திருடன் படங்களில் நடித்த காம்னா, தமிழில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டுமென்று போராடி வந்தார். அதன் பலனாக, இப்போது, காசேதான் கடவுளடா என்ற படத்தில் நாயகி வேடம் கிடைத்துள்ளது. முன்பை விட இப்படத்தில் கூடுதல் கவர்ச்சி சேவை புரிந்துள்ள காம்னா, இதே படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடும் மேக்னா நாயுடுவையே மிஞ்சும் வகையில் அதிரடி கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார். அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்! - எலீசா.

சி.ஐ.டி., ரோலில்  நமீதா!

நடிகர் பிரகாஷ்ராஜ் தன் டூயட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடிக்கும் படம், 'இ.பி.கோ., 376!' இப்படத்தின் மூலம் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்துள்ள நமீதா, முதன் முறையாக புலனாய்வு செய்யும் சி.ஐ.டி., போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக தன் பெருத்த உடற்கட்டை, பலநாள் பட்டினி கிடந்து, கணிசமான அளவு குறைத்துள்ளார். -  சினிமா பொன்னையா.

தனுஷûக்கு பிடித்த நடிகை!

நடிகர் தனுஷிடம், உங்களுடன் நடித்த நடிகைகளில் பிடித்தமானவர் யார் என்று கேட்டால், காமெடி நடிகை ஆர்த்திதான் என்கிறார். 'அவருடைய காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும்; அதனால்தான் என் ஒவ்வொரு படங்களிலும் ஆர்த்திக்கு சிபாரிசு செய்து வருகிறேன்...' என்கிறார்.- சி.பொ.,

பரபரப்பு கூட்டும் பத்மப்ரியா!

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திற்கு பிறகு பத்மப்ரியாவின் பெயரே அடங்கி விட்டது. இதனால், பரபரப்பு கூட்ட, மீண்டும் மிருகம் பாணியில் சர்ச்சைக்குரிய கதைகளை தேடுகிறார் பத்மா. இது சம்பந்தமாக சாமி உள்ளிட்ட சில சர்ச்சை இயக்குனர்களையும், 'மீட்' பண்ணி வருகிறார். இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்றது போல்! - எலீசா.

அர்ஜுனின் காமெடி படம்!

'வல்லக்கோட்டை' படத்தில் படகில் சென்று கடலில் மீன் பிடிக்கும் மீனவனாக நடிக்கிறார் அர்ஜுன். இதற்காக ஐந்து விதமான கெட்-அப் போட்டு நடிக்கும் இவர், படத்தில் 40 சதவீதம் ஆக்ஷன் என்றால், 60 சதவீதம் காமெடியாக நடித்துள்ளார். இதுவரை வடிவேலு, விவேக்குடன் காமெடி செய்த அர்ஜுன், இப்படத்தில் கஞ்சா கருப்புடன் இணைந்து முதன் முதலாக காமெடி செய்துள்ளார்.- சி.பொ.,

ரியாசென் சேவை மனம்!

தாஜ்மகால் பட நாயகி ரியாசென் மீண்டும் தமிழில் மாயம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்வை குறைபாடுள்ள சல்மான் அன்சாரி என்பவர் இயக்கும் இப்படமும் பார்வையற்றோர் பற்றிய கதையில்தான் உருவாகிறது. அதனால், இப்படத்தில் நடிப்பதன் மூலம் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை பார்வையற்றோர் பள்ளிக்கே வழங்க முடிவு செய்துள்ளார் ரியாசென். -  எலீசா. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us