தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : ஏப் 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மியான்மர் போலீசிடம் சிக்கிய தமிழ்ப்படக் குழு!

கடல் கவுதம் தற்போது நடித்து வரும் படம், ரங்கூன். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் மியான்மரில் நடைபெற்றது. அப்போது, முறையான அனுமதி பெறாமலேயே பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால், தகவல் அறிந்த அந்நாட்டு போலீஸார் யூனிட்டில் வேலை செய்த அனைவரையும் பிடித்துச் சென்று, சிறையில் அடைத்து விட்டனர். விஷயம், முருகதாசுக்கு சென்ற போது, உடனடியாக தன் ஆட்களை அனுப்பி, அபராதம் கட்டி, அவர்களை வெளியில் கொண்டு வந்தார்.

— சினிமா பொன்னையா

பேய் நடிகையாகும் ராய் லட்சுமி!

அருந்ததி அனுஷ்கா போன்று, தற்போது ஸ்ரீகாந்துடன் நடிக்கும், சவுகார்பேட்டை படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராய் லட்சுமி. அதோடு, சில காட்சிகளில் அவர் பேயாகவும் நடிக்கிறார். அதேபோல், மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் மாந்திரீக கதையில் நடிக்கும் ராய் லட்சுமி, இனிமேல், கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, அதிரடி கதாபாத்திரங்களுக்கே முதலிடம் கொடுக்கப் போவதாக கூறுகிறார். அவ்வகையில், சவுகார்பேட்டை படம் திரைக்கு வந்ததும், அப்படத்தின் கேசட்டை கையில் வைத்து, தெலுங்கு மற்றும் கன்னட பேய் பட இயக்குனர்களை சந்தித்து, நடிக்க வாய்ப்பு கேட்கவும் திட்டமிட்டுள்ளார். காணக் கிடைத்தது, கார்த்திகை மாதத்து பிறை போல்!

— எலீசா

விஜய்யின் புதிய, 'காமெடி டீம்!'

துப்பாக்கி, ஜில்லா மற்றும் கத்தி என்று ஆக் ஷன் படங்களாக நடித்த விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும், புலி படமும் ஆக் ஷன் படமாக இருந்தாலும், அதற்கு இணையாக காமெடி காட்சிகளும் அதிகமாக உள்ளது. ஆனால், இப்படத்தில் தற்போதைய முன்னணி காமெடியன்களான சந்தானம் மற்றும் சூரி என்று யாரும் இல்லை. அதற்கு பதில், தம்பி ராமைய்யா, இமான் அண்ணாச்சி மற்றும் ரோபோ ஷங்கர் என, ஒரு காமெடி டீம் விஜய்யுடன் இணைந்திருக்கிறது. அதனால், காட்சிகளில் நடிப்பதற்கு முன்னதாக, அக்காட்சியை பற்றி ஒருவருக்கொருவர் விவாதம் செய்து நடித்து அசத்துகின்றனர்.

— சி.பொ.,

மம்முட்டியின் தேசிய விருது ஆசை!

கடந்த 2006ல், மீனா மற்றும் பத்மபிரியாவுடன் இணைந்து மம்முட்டி நடித்த மலையாள படம், கருத்த பட்சிகள். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, தேசிய விருதும் பெற்றது. ஆனால், மம்முட்டியின் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடக்கவில்லை. விளைவு, அப்படத்தின் இயக்குனரான கமல் இயக்கத்தில் மீண்டும் நடித்து, தேசிய விருதை பெற்று விட வேண்டும் என்று ஆசைப்பட்ட மம்முட்டி, மீண்டும் அவரிடம் ஒரு கதை தயார் செய்யச் சொல்லி, தற்போது அதில் நடித்து வருகிறார். இதில், சிற்பியாக நடிக்கும் மம்முட்டி, சிலை வடிப்பது குறித்து, நிஜ சிற்பியிடம், நேரடி பயிற்சி பெற்று நடித்து வருகிறார்.

- சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த போது, சம்பள விஷயத்தில் அடக்கி வாசித்து வந்த ராய் நடிகை, இப்போது, அதிரடி வேடங்களில் நடிப்பதை தொடர்ந்து, தன் படக்கூலியை தாறுமாறாக உயர்த்தியுள்ளார். இதனால், பட்ஜெட் நடிகை என்று அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற சில தயாரிப்பாளர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்.

தாரா நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த பிரியாணி நடிகர், இப்போது, இன்னொரு மலையாள நடிகைக்கு, 'ரூட்' விட்டு வருகிறார். அதோடு, தான் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும், மேற்படி நடிகைக்கு தூது விட்டுள்ளார். ஆனால், நடிகருடன், 'டூயட்' பாடினால், 'கிசுகிசு'வில் சிக்க நேரிடும் என்று, அந்த மலையாள நடிகை டேக்கா கொடுத்து வருகிறார்.

தளபதி நடிகருடன் நடிக்கும் படத்தில் பப்ளிமாஸ் நடிகையை, ஹாசன் நடிகை ஓரங்கட்டி விட்டதால், அவரது அதிரடி நடிப்பினால், அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி விட்டார் இயக்குனர். இதனால், படம் திரைக்கு வரும் போது, தான் டம்மியாக்கப்பட்டிருப்போமோ என்று உள்ளூர அச்சத்தில் இருக்கிறார் பப்ளிமாஸ் நடிகை.

சினி துளிகள்!

* அமர காவியம் படத்தில் நடித்த மியா ஜார்ஜ், மலையாளத்தில் நடித்த ஐந்து படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகியுள்ளன.

* பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், சம்பளத்தையும் படிப்படியாக குறைத்து வருகிறார் ஹன்சிகா.

* தன் அடுத்த பட கதாநாயகன் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us