
பொங்கலுக்கு மோதும் ஐந்து படங்கள்!
பொங்கலுக்கு, பாலாவின், தாரை தப்பட்டை, சூர்யாவின், 24 மற்றும் சுந்தர்.சியின், அரண்மனை - 2 ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், தற்போது, ஜெயம் ரவியின், மிருதன் மற்றும் விஷாலின், கதகளி ஆகிய படங்களும், பொங்கல் வெளியீடு பட்டியலில் சேர்ந்துள்ளன. அதனால், முக்கிய தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சியில், மேற்படி பட நிறுவனங்கள் வரிந்து கட்டி நிற்கிறது.
— சினிமா பொன்னையா
ரீ - மேக் படமெடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!
வை ராஜா வை மற்றும் 3 படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்தபடியாக, ஒரு கதையை தயார் செய்து, சில கதாநாயகர்களிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். ஆனால், அவர் இயக்கிய முதல் இரு படங்களுமே தோல்வியடைந்து விட்டதால், 'ரிஸ்க் எடுக்க வேண்டாம்...' என்று, மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான, பிரேமம் படத்தை, ரீ- மேக் செய்ய சொல்லி விட்டார் தனுஷ். அதனால், தமிழுக்காக எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல், அந்த ஸ்கிரிப்ட்டை அப்படியே தமிழில் ரீ - மேக் செய்பவர், இப்படத்திற்காக, விஜயசேதுபதி - ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார். காலத்துக்கு ஏற்ற கோலம்!
— எலீசா
இலங்கை சூதாட்ட கிளப்பில் சன்னி லியோன்!
நிர்வாண காட்சிகளில் நடித்து வரும் சன்னி லியோனை கண்டித்து, பாலிவுட்டில் தொடர் போராட்டம் நடந்து வந்த போதும், அதையெல்லாம் கண்டுகொள்ளாத சன்னி லியோன், படங்களில் நடித்து வருவதுடன், டிச., 20ல் இலங்கையில் உள்ள, 'கேசினோ' சூதாட்ட கிளப்பில் நடக்கும் இசை நிகழ்ச்சியில், ஆபாச நடனம் ஆடயிருக்கிறார். இதற்காக, அவருக்கு பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது. ஆடி தவித்த குரங்கு, மத்தளத்தில் ஏறி இருப்பது போல!
— எலீசா
விஷாலின் அடுத்த டார்கெட்!
நடிகர் சங்க தலைவர்களாக இருந்து, பின், அரசியலில் பிரவேசித்த சரத்குமார், விஜயகாந்தைப் போல், தானும் எதிர்காலத்தில் அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை, விஷாலுக்கு மேலோங்கியுள்ளது. அதன் காரணமாக, தற்போது, நடிகர் சங்க செயலாளராகியிருக்கும் அவர், விஜய் பாணியில், நலத்திட்ட உதவிகளை செய்வதுடன், தன் ரசிகர் மன்றத்தையும் கவனிக்க துவங்கியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பாலிவுட்டின் பிரபலமான, கஹானி நடிகைக்கு, தென்னிந்திய சினிமாவில் கொடி நாட்ட ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் இங்கே, 'என்ட்ரி' கொடுத்தால், தனக்கான வாய்ப்புகளை தட்டிப்பறித்து விடுவார் என்று, தாரா நடிகை கடுப்பில் இருக்கிறார். அதன் காரணமாக, தன் புதிய படத்துக்கு, சுள்ளான் நடிகர், அந்த பாலிவுட் நடிகையை, ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியபோது, உள்ளே புகுந்து, அதற்கு கத்தரி போட்டு விட்டார் தாரா.
நடிகர் சங்க தேர்தலுக்கு முன், நாட்டாமை கூட்டணியில் இருந்த மூன்றெழுத்து இயக்குனர், சண்டக்கோழி அணியினரை கடுமையாக விமர்சித்தார். ஆனால், நாட்டாமை தோல்வியடைந்ததை அடுத்து, இளவட்ட கதாநாயகன்களை, பகைத்துக் கொண்டது தவறாகி விட்டதே என்று, 'பீல்' செய்த இயக்குனர், தன், செயலுக்கு வருத்தம் கோரியிருக்கிறார். ஆனால், அதற்கு செவிசாய்க்கவில்லை இளவட்ட நடிகர்கள். இதனால், மூன்றெழுத்து இயக்குனர், மூடுஅவுட்டில் உள்ளார்.
பாலிவுட்டில் பிரவேசித்த நண்பன் நாயகி, தினமொரு நடிகர்களுடன், 'பப்'புகளுக்கு விசிட் அடிப்பதுடன், அளவுக்கதிகமான, 'ஆல்ஹகாலில்' இறங்கி, விடிய விடிய ஆட்டம் போடுகிறார். அத்துடன், 'புல் மப்'பில் சாலைகளில் வண்டியோட்டி, அடிக்கடி போலீசில் மாட்டுகிறவரை, அவருக்கு நெருக்கமான அரசியல்வாதிகளே பிரச்னையில் இருந்து மீட்கின்றனர்.
சினி துளிகள்!
* நானும் ரவுடிதான் படத்தின், 'ஹிட்'டுக்கு பின், வழக்கமான கதாநாயகி கதைகளில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா.
* ஆஸ்திரேலியாவை சேர்ந்த, ஆண்ட்ரூ என்பவரை இலியானா காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
* நல்ல வித்தியாசமான கதாபாத்திரம் வந்தால், மீண்டும் நடிக்கும் முடிவில் உள்ளார் இயக்குனர் சேரன்.
அவ்ளோதான்!